சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-11.10.2022
இலக்கம்-195
ஒன்று பட்டு
—————————-
வாழ்வியலை வழமாக்க
துடிப்போடு வளரும் சமுதாயம்
இன வேற்றுமையின்றி
ஒரு குடைக்கீழ் ஒரு குரலாய்
ஒன்று பட்டு வாழ்ந்தால்
அரசியலிலும் வெற்றி பெற முடியுமே
சாதி மத பேதமின்றி
ஒரே வகுப்பறை கல்வியுடன் கற்று
பணிகளில் ஒன்றாக ஒன்று பட்டு வாழ்ந்து
உயர் நிலை அடைந்தனரே
விவசாயப் பெரும் குடி மக்கள்
வறிய பெரிய உழைப்பாளருக்கும்
ஒன்று பட்டு உணவழித்து
ஒற்றுமையுடன் வாழ்கின்றனரே
மானிடத்தில் பல தெயய்வங்களுமுண்டு
மானிடத்தில் பல பேயகளுமுண்டு