கவிதை நேரம்-06.10.2022
கவி இலக்கம்-1985
என் வகுப்பறை ஆளுமைகள்
—————————————–
ஆரம்ப வகுப்பிலே சிலேட்டு பலகையில்
கை விரல் பிடித்து எழுத தொடக்கினவர்கள்
அகரம் சொல்லி தந்த ஆசான்கள்
அறிவை புகட்டி ஒழுக்கம் சொல்லி தந்தவர்கள்
வகுப்பில் அறிவொளியாய் அணைத்த ஆசிரியை
வகுப்பில் கொப்பி அடித்து பிடி பட்டதில்
ஓங்கி தலையில் குட்டு வாங்கிய வலிகள்
நேராக இறங்கிய மண்டையின் படிப்புக்கள்
செவியில் வாங்கிய முறுக்கலில்
உடலும் உயர்ந்தது ஆளுமை பிறந்தது
பள்ளியில் வீட்டுப் பாடம் செய்யாத தன்மை
வகுப்பறையில் கதிரை ஏறிய தண்டனையில்
ஆசிரையையின் புத்திமதியில் நிமிர்ந்தேன்
பள்ளி வகுப்பறை முதல் மாணவியானேன்
கல்வி ஒழுக்கம் தந்து அரவணைத்தார்
வகுப்பில் மாணவர் தலைவியாகினேன்
நேர காலத்தோடு வகுப்பறை புகுவேன்
வகுப்பறை ஒழுங்குகள் திறம்படச் செய்வேன்
வகுப்பாசிரியர் என் ஆழுமை கண்டு வியந்தார்
தலைமை ஆசிரியரிடம் பாராட்டு பெற்றேன்
நல்ல துறைக்கு என்னை வளர்த்து விட்டனர்
அத்தனை ஆசிரியர்கள் மறக்கவே இல்லை
எவரும் இப்பபூமியில் இல்லையெனின்
பிரிந்தவர்கள் மறைந்தவர்கள் அல்ல
எம் நினைவில் என்றும் இருப்பவர்கள் பூஜிப்போம்