சந்தம் சிந்தும் கவிதை

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-04.10.2022
கவிதை இலக்கம்-194
கலைவாணி
———————
கலைவாணி மாதம் ஐப்பசி மாதமே
வெள்ளை தாமரை மலர் வீற்றிருப்பவளே
வீணை கையில் வைத்து ஒளிபவளே
கல்விக்கு அதிபதியாய் திகழ்பவளே
கலைகள் அனைத்தையும் ஊட்டுபவளே
அறியாமை அகற்றி ஒளி விளக்கானவளே
அருட்பெரும் ஜோதி ஆனந்த கலை மகளே
வேத நீதிகளுக்கு வித்தாக ஒளிர்பவளே
சாதி மத பேதமின்றி நிலைத்திருப்பவளே
உலக தமிழ் மக்களிடை திகழும் கலைச்செல்வியே
உம் புகழ் என்றும் கல்வியிலே நிலையானதே