சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-27.09.2022
கவி இலக்கம்-193
மழை நீர்
—————-
வானம் பொழியும் மழை நீர்
மண்ணிற்கு உரமாகும் பன்னீர்
தாகம் தீர்க்கும் பானமான நீர்
தரணியில் இல்லை கண்ணீர்
கொட்டும் ஒவ்வொரு துளி நீர்
விதைகள் வெடித்து கிளம்பும் உயிர் நீர்
வரமாய் மனிதனுக்கு தண்ணீர்
வாழ்வதர்கான உரமாய் நன்னீர்
சிப்பி ஏற்று முத்தாகும் ஒளி மழை நீர்
பெண்களின் சொத்தாக்கும் உயர் நீர்
மானிடர் உயரினங்களுக்கு உரித்தான நீர்
இறைவன் இயற்கையில் கிடைத்த நீர்
சிறப்புடன் இன்பம் பெருக்கும் மழை நீர்