சந்தம் சிந்தும் கவிதை

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-20.09.2022
கவி இலக்கம்-192
மாட்சிமை மிக்க மகாராணியார்
———————————————
பிரித்தானிய வரலாற்றில் நீண்ட கால மகாராணியாவர்
ஐ.இராச்சியத்தின் 2-ம் எலிசபேத் முத்திரை பதித்தவர்
21.சித்திரை 1926 ல் இங்கிலாந்தில் பிறந்தவர்
தனிப்பட்ட முறையில் கல்வி பயின்றவர்
25 வயதில் மகாராணியா முடி சூட்டியவர்
1947 ஆடி எடின்பரோ கோமகனை கரம் பிடித்தவர்
70 ஆண்டுகள் அரியணை ஆட்சியில் அமர்ந்தவர்
பாக்கிங்காம் அரண்மனை காட்சியானவர்
மூன்று நாடுகளுக்கான பதவியை ஏற்றவர்
இங்கிலாந்தின் இராஐமாதா எலிசபேத் பெயரானவர்
15 பிரித்தானியா பிரதமர்களை அறிந்தவர்
ஏழு தசாப்தங்கள் நீடித்த ஆட்சியுடையவர்
ஸ்கொட்லாந்து அரண்மனை ஓய்வில் தங்குவார்
பால்மரல் அரண்மனை 8.9.22 ல் நித்தியமானார்
உலகம் போற்றும் மகாராணி அம்மையாக திகழ்ந்தவர்