கவிதை நேரம்-15.09.2022
கவி இலக்கம்-1674
மனித நேயம்
அலைபாயும் உலகினிலே
நிலையானது எதுவுமில்லை
அன்பென்ற சொல்லிற்கு
அர்த்தமும் ஏதும் இல்லை
அவலை நிலையிலா இல்லமும் இல்லை
அமைதியிலே வாழும் உள்ளமும் இல்லை
மாண்புடைய மனிதன் இன்று
மனித நேயம் மறந்து மத வெறியும்
கதிராக உதித்த பெண் குழந்தைகள்
பாதுகாப்பின்றி பாலியல் படுகொலைகள்
ஆதரவின்றி அவதியுறும் உள்ளங்கள்
மது குடி போதை வஸ்து வன்முறைகள்
மாசு படிந்த மனங்கள் மண்ணில் நிறைந்திட
மனித நேயம் படைத்த மனிதம் எங்கே
அனாதைகள் பெண்கள் அகதிகள் என்றும்
முடங்கியது எம் மக்களின் வாழ்வு
உதவும் கரங்கள் இங்கு இருக்கும் வரை
மனித நேயம் சிறப்பு பெற உதவிடுவோம்
மனித மாண்பு மலர்ந்திட வாழ்ந்திடுவோம்