சந்தம் சிந்தும் கவிதை

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-13.09.2022
இலக்கம்-191
எண்ணம்
நாம் விதைக்கும் எண்ணங்களே
நம்மிடையே திரும்பி வந்து சேரும்
கண்களிலே எண்ணிலா சிந்தனை
உள்ளத்தில் உறைய வைக்கும்
மனதிலே பல எண்ணங்கள்
கோலங்களாக மாறும்
இராத்திரியிலே தோற்றுவிக்கும்
கனவுகளாக வந்து போகும்
எண்ணங்கள் நிறம் கொண்டு
வண்ணங்களாய் மாறிடும்
நினைவலைகளில் வந்து ஓடும்
எண்ணம்போல் வாழ்க்கை
எம்மால் முடியுமமென்றால் முடியும்
முடியாதெனில் தோல்வியே கிட்டும்
வாழ்க்கை எனும் சக்கரத்திலே
அச்சாணியாய் தினம் சுழல வைக்கும்
அனைத்தும் எண்ணம் கொண்டு அமையும்