கவிதை வாரம்–25.08.2022
கவி இலக்கம்-1563
தேடும் உறவகளின்
தணியாத ஏக்கங்கள்
———————————
சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்ல வார்த்தையில்லை
தேடும் உறவுகளின்
தணியாத ஏக்கங்கள்
ஆண்டாண்டு தோறும் தேடியும்
கண்டு பிடிக்காத நிலையில்
தோளிற் தாங்கிய தந்தையாக
மடியிற் சுமந்த அம்மாவாக
கணப்பொழுதில் கணவனை இழந்த பெண்ணாக
எப்படி இந்த பிரிவுகளை தாங்க முடியும்
தேடித் திரிந்து உயிர்களை விட்ட தாய்மார்கள்
ஏங்க வைத்து தவித்த உறவுகளின் குரல்கள்
களைத்து போய் ஒதுங்கிய பெற்றோர்கள்
கடத்தப்பட்டோர் காணாமற் போனோரை
நீதி கேட்டு நியாயம் வேண்டி
உண்ணாவிரதம் போராட்டங்களும்
தம் உயிரை பாராது நீதி கேட்டு
படியேறி இறங்கி களைத்தார்களே
சிறை பட்ட வாழ்வு கறை பட்டு போனதே
ஏங்கிடும் எம்மவர் உறவுகளுக்கு
நல்லோர் கண்கள் அகல விரியட்டுமே
தேடும் உறவுகளின் ஏக்கங்கள் குறையட்டுமே