சந்தம் சிந்தும் கவிதை

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-23.08.2022
கவிதை இலக்கம்-188
விடுமுறை
———————-
விடுமுறை வருடந்தோறும் வருமே
கோடை என்றதுமே விடுமுறையே
இம்முறை விடுமுறை அயலூரிலே
ஐரோப்பிய மண்ணின் சுற்றுலாவிலே
சுவிஐ் சூரிச் றைன் நீர் வீழ்ச்சியிலே
பிள்ளைகளுடன் அருமை விடுமுறையே
கப்பலில் பயணம் தென்றல் தாலாட்டவே
சுற்றியே வலம் வந்தே மகிழ்ந்த நேரமே
மக்கள் கூட்டம் பல இனம் கண்டோமே
வரலாறு படைத்த கோட்டைகளுமே
அற்புத வண்ண சித்திர வேலைப்பாடுமே
திரும்பும் இடமெலாம் அழகிய மலர்களுமே
விரும்பிய உணவுகள் காணக் கிடந்தனவே
அற்புத காட்சிகளாக விடுமுறை சந்தித்தேனே
இறைவன் கொடையே இயற்கையின் சிறப்பே
மீண்டும் விடுமுறை எதிர்பார்த்து ஆவலுடனே