சந்தம் சிந்தும்் சந்திப்பு வாரம்-188
கவி இலக்கம்-188
மறைந்து போன மனிதம்
——————————-
மனித உயிர் இதய தோட்டத்திலே
பல வர்ண றோஜாப் பூக்கள்
பார் போற்றும் அழகிய பூமியிலே
பலவிதமான அற்புத மனிதப் பிறவிகள்
பூந்தோட்ட சோலைகள் சில இடங்கள்
பாலைவன வனாந்திரங்கள் பல இடங்கள்
மனிதபிமானம் மரணித்து போயின
காதல் எனும் அழகிய சோலையிலே
விவாகரத்து முதலிடமாகி விட்டன
பாலியல் உறவு பலாத்கார வன்செயல்கள்
மன அழுத்தம் தற்கொலைகள் மலிந்தன
கொள்ளை களவு கத்திக் குத்து மரணங்கள்
கண்ணீர் வடிக்கும் பெற்றோர் பலர்
நல்லெண்ணங்கள் நலிந்தே போயின
பாசம் கேட்டு பரிவு காட்டி பண்போடு
நேசத்தோடு இனங்கண்டு மனித நேயத்துடன்
புனிதத்தோடு மனிதத்தை வாழ வைப்போம்