சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-16.08.2022
கவிதை இலக்கம்-187
கற்றுக்கொள்
———————–
இயற்கை வனப்பை இறைவனிடம் பெற்றுக்கொள்
அன்பின் பண்பை பெற்றோரிடம் கற்றுக்கொள்
அறிவை ஆசானிடம் படித்து அறிந்துகொள்
பதவியை பணிவோடு செய்துகொள்
நன்மை செய்து புண்ணியம் சேர்த்துக்கொள்
நல்லதை எண்ணியே மகிழ்ந்துகொள்
பிறருக்கு உதவிட கரம் கொடுத்துக்கொள்
நன்மை செய்து நாலு பேர் போற்றிட வாழ்ந்துகொள்
சுகநலம் பேண சுகாதாரம் கற்றுக்கொள்
நீண்ட ஆயுளுடன் வாழ பலதையும் அறிந்துகொள்
உண்மை பேசி உலகில் உத்தமனாய் வாழ்ந்து கொள்
சாதனை படைத்து சரித்திரமாக்கிகொள்