வியாழன் கவிதை

Jeya Nadesan

கவிதை நேரம்-04.08.2022
கவி இலக்கம்-1551
என் மனதில் நட்பின் நண்பி
————————————–
வருடங்கள் மாறும் பருவங்கள் மாறும்
எண்ணங்கள் மாறும் உருவங்கள் மாறும்
ஊர்கள் மாறும் என்றும் மாறாதது நல் நட்பே
படிக்கும் வயதினிலே கூடித் திரிந்த கோலம்
சிறகடித்து ஊர் ஊராக உலாவி வந்த காலம்
நட்போடு நாம் இணைந்து கடந்த காலம்
இப்போது நினைத்தாலும் நினைவழியாக் காலம்
நீர்வேலி மண்ணில் நீயும் உதித்தாய் நானும்
உறவென்று உயிராக நட்பாய் நின்றோம்
பல தூரம் பிரிந்திருந்திருந்தும் பாசமது மறக்கவில்லை
நினைக்கும் போதெல்லாம் தொலைபேசி அழைக்கும்
நட்பென்ற பண்பதனை நல்லாய் நேசித்தோம்
இன்ப துன்பங்கள் மாறி மாறி சந்திப்போம்
நீ ஒரு நாடு நான் ஒரு நாடு கம்பேர்க் சந்தித்தோம்
இருந்தும் பாமுக பயனும் பகிர்வும் நிகழ்வில்
செல்லக் கதைகள் பேசி பகிர்ந்து கொண்டோம்
சிரிப்பொன்றை பொக்கிசமாக்கி கதைத்தோம்
நட்புக்கு என்மனதில் அடையாளம் இட்டாய்
இன்று தளர்ந்த நிலை நலமற்று பேசினாய்
ஆறுதல் வார்த்தையில் என்றும் நலமாயிரு
நெஞ்சை விட்டகலாது உன் நட்பின் நினைவலைகள்
இறைவன் அருள் தந்தால் சந்தித்து கொள்வேன்