சந்தம் சிந்தும் கவிதை

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-02.08.2022
கவிதை இலக்கம்-185
நீதிக்கு போராடு
————————
இயற்கையெனும் பூமிப் பந்தலிலே
ஓடும் மேகங்களை பார்க்கையிலே
எங்கேயே ஓடிக் கொண்டே ஓடுகிறீர்கள்
கூவும் குயில்களே ஏன் கூவுகிறீர்கள்
தேடும் உறவுகளே யாரை தேடுகிறீர்கள்
நீதியும் இல்லை நியாயமும் இல்லை
அநியாய ஆட்சியிலே முடிவும் இல்லை
மதி கெட்ட மாந்தர்க்கு மூளையும் இல்லை
மக்கள் தெரு வீதிகளிலே போராட்டமே
துன்பப் பட்டு இன்னல்கள் இழப்புக்களே
கண்ணீர்க் கதைகளாக தொடர்கிறதே
நேற்றையது ரஸ்யா-உக்ரைன் போராட்டமே
இன்று ஈழத்திலே இனங்கள் அழியும் நிலையே
நாளை உலகம் கண்ணீரிலே மிதக்கிறதே
உரிமை கோரி போராடுவது தவறில்லை
உயிருக்காய் போராடும் எம் இனத்தவற்கு
எப்போதுமே விடிவாக இல்லையே
வேடிக்கையாக இருக்கிறது எம் தலைவர்களுக்கே