சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-26.07.2022
கவி இலக்கம்-184
ஓரங்கட்டு
——————–
பொய்யை சொல்லி விட்டு
உண்மையென நம்ப விட்டு
பலரிடம் திட்டு கேட்டு விட்டு
இறுதியிலே கண்ணீர் விட்டு
மானம் கெட்டு ஒளிந்து அலைகிறாயே
உள்ளத்தை தொட்டுப் பார்த்து விட்டு
உண்மைக்கு முதலாய் கட்டுப்பட்டு
பொய்மையை முழுமையாய் ஓரங்கட்டு
உண்மையை ஒத்தாக சொல்லி விட்டு
நல்லவர்கள் கண்ணில் பட்டு
நாலு பேரிடம் வாழ்த்து கேட்டு
நல்லவனாய் வாழ்ந்து காட்டு