சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-19.07.2022
கவிதை நேரம்-178
றோஜாக்களின் எண்ணங்கள்
———————————–
முற்றமதில் சிவப்பு றோஜாவாக
மொட்டவிழ்த்து நிற்கையில்
தெருவோரத்து மஞ்சள் றோஜாவாக
ஏளனப் பார்வை புன்னகையில்
அடர்த்தி இதழுமாய் நானிருக்க
காதலர்கள் அன்பு பரிசென
அன்று விரிந்த றோஜாவுக்கு
அற்புத வடிவாய் நான் மகிழ
மஞ்சள் றோஜாவின் புன்னகையை
அலட்சியமாய் மனதில் ஏற்கிறது
நேற்று மலர்ந்த மஞ்சள் றோஜாவே
தெருவோரத்தில் பூத்து தேடுவாரற்று
உதிர்ந்து கால் மிதி பட்டு சாவாய்
நானே அழகின் வடிவமாய்
பெண்கள் என்னை விரும்பி
தலையில் சூடி மகிழ்வதை
தன் எண்ணமதில் நினைத்து கொண்டது