சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-12.07.2022
கவிதை இலக்கம்-182
கோடைகால விடுமுறை
———————————
விடுமுறை வருமே ஒவ்வொரு ஆண்டுமே
குதூகலித்து மகிழ்ந்த காலம் மறைந்ததே
விடுமுறை தாயகம் செல்ல தடையானதே
அரசியல் பிரச்சினைகள் தடை போட்டதே
வாகனங்கள் ஓட பெற்றோல் விலை அதிகமானதே
பஞ்சம் பசி பட்டினி காரணமானதே
போக்குவரத்து பணம் விலையானதே
உணவுகள் அதி விலையால் உயர்வானதே
வெப்ப அதிகரிப்பும் புழுக்கமும் ஆனதே
மீண்டும் கோவிட் தொற்றும் அதிகரிப்பே
விடுமுறை காலமோ இருட்டாகியதே
மனப் பயமும் வீட்டில் முடங்க வைத்ததே
வீடுதான் தஞ்சமென விடுமுறை வியப்பானதே