கவிதை நேரம்-23.06.2022
கவி இலக்கம்-1531
மீளெழும் காலம்
———————-
ஆறறிவு உடைய மனிதனை படைத்து
அவலங்கள் பலதையும் அள்ளி கொடுத்து
அனாதை என்ற சொல்லே நீண்டு நினைவில்
அவலங்கள் மட்டும் தொடர்கின்றனவே
அண்டி வாழ்வது அன்றாடச் செயலன்றோ
உலர்ந்த மண்ணில் அகோர வெப்பம்்
உயிர் கொல்லும் நோய்களினால் துன்பம்
வறுமையும் தொழிலின்மையும் ஏக்கம்
வரவுக்கு மேலாய் பொருட்கள் விலை ஏற்றம்
மகிழ்வும் நிம்மதியும் அற்றதில் சீற்றம்
பல பக்கச் செய்திகள் பலதுமாய்
குலை நடுங்கும் வதந்திகள் ஏராளம்
குண்டுகளும் தாக்கங்களும் மரணமும்
காதில் கேட்பது மக்களின் புலம்பல் ஓசை
மொத்தமாய் கேட்பது அவல ஓசைகள்
சொந்த பந்தங்களின் சுகம் கேட்க முடியாது
நன்மை தின்மைகளுக்கும் சேர முடியாது
அகதிகளாய் ஓடியே ஆயுள் முடிந்திடுமோ
மீளெழும் காலம் விடியலாய் மலரட்டுமே