சந்தம் சிந்தும் கவிதை

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-14.06.2022
கவி இலக்கம்-179
வெள்ளி விழா காணும் பாமுகம்
———————————————-
வெள்ளி விழாவில் தடம் பதித்து
பாமுகத்தில் இளையோர் பெரியோர்
25 வருடத்தை விழாவாக கொண்டாடி மகிழ்ந்தனரே
லண்டன் தமிழ் வானொலியாய் பிறந்து
தவழ்ந்து நடந்து உயர்ந்து வளர்ந்து
அடுத்த தலைமுறை நோக்கிய பயணத்தில்
இளையோர் பெரியோர் உட்பட
ஆற்றிவரும் நிகழ்வுகள் போற்றுதற்குரியதே
பக்க பலமாக நடா மோகன் கலைவாணி மோகன்
மனிதநேய பணிகளும் பெருமைக்குரியதே
பல நிகழ்வுகள் இடம்பெற்று சிறக்கவே
சந்தம் சிந்தும் சந்திப்பு வார நிகழ்வில்
கவிஞர் பாவை கவி படித்து திறனாய்வு செய்வதும்
கவிஞர்கள் கவி படித்து சிறப்பிப்பதும் பெருமையன்றோ
போற்றுவோம் புகழுவோம்
நன்றி பாராட்டி வாழ்த்துவோம்