கவிதை நேரம்-09.06.2022
கவி இலக்கம்-1524
நிழலாடும் நினைவுகள்
—————————————–
தென் கிழக்கு ஆசியாவின்
முதல் தர நூலகத்திற்கு
இருள் சூழ்ந்த நடு இராத்திரியில்
கூலிப் படையினரால் தீ வைத்து கொழுத்த
எரிந்தவை வெறும் வெற்று தாள்கள் அல்ல
தமிழ் இனத்தின் ஆன்மாவும்
தாவீது அடிகளாரின் உயிருமே
நம் முன்னோர்களின் மூச்சுக்களுமே
சிதைந்த கட்டிடங்கள்
வெறும் கட்டிடங்கள் அல்ல
ஈழ மக்களின் வரலாற்றுப் பெட்டகங்கள்
கல்லடியார் நவாலி புலவர் வீரமா முனிவர்
அழியா சுவடிகள் எரிந்து சாம்பலாயின
யாழ் வரலாற்றின் ஆவணங்கள் அழிந்தன
ஈழநாடு பத்திரிகை காரியாலயம்
கடைகள் தீக்கிரையாகி புகை வானில் கலந்தன
வரலாற்று புகழ்கொண்ட ஆவணங்கள் தீக்கிரையாகின
காலங்கள் மாறினாலும்
கறைபடிந்தத நினைவுகள் மாறாது
அன்று இட்ட பொறிதான்
இன்று கொழுந்து விட்டு எரிகிறது