சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-07.06.2022
இலக்கம்-177
பழமை
———————–
பழையன கழிதலும்
புதியன புகுதலும்
உலக மக்களின் பழக்கமன்றோ
காவோலை விழ குருத்தோலை சிரிக்குமாம்
மூக்குப் பேணி அப்பு ஆச்சியின் பொக்கிசமும்
குவளை தட்டும் கண்ணாடி கோப்பையும்
புதியனவாய் தற்கால நடைமுறையானதன்றோ
குப்பி விளக்கில் படித்து பதவி உயர்வும்
மின்சார விளக்கில் படித்து பணம் செலவானதன்றோ
மூலிகைகளில் குடிநீர் சூறணமும் பழமையில் இயற்கையே
ஊசிகளும் வர்ண நிறக் குளிகைகளும் செயற்கையன்றோ
அப்பு ஆச்சி காலத்தின் பழமைகள் மறைந்திட
நவீன காலத்தில் புதியனவாக அதிசயமாகின்றனவே