வியாழன் கவிதை நேரம்-02.06.22
கவி இலக்கம்-1522
நீங்காத நினைவில்
—————————
இந்துக் கடல் இடுக்கில் எழுந்த நெடு நிழலில்
சங்கு கரை ஒதுங்கும் சமுத்திரத் தீவுதனில்
நெடுந்தீவில் பிறந்து யாழ் சுண்டுக்குழியில் வாழ்ந்து
ஜேர்மனி முள்கைமில் உடன் பிறவாத் தங்கை கோசல்யா
ஒன்பது பேரில் ஆறாவது பிள்ளையாக துணிவைத் துணையாக்கி
வைராக்கியத்தை வைரமாக்கிய பெண்ணிய பெண்ணாக
ஆசிரியை கவிதாயினி லண்டன் வானொலியின் ஆக்கதார உறவாகி
எல்லோரினதும் வாழ்த்தும் பாராட்டும் பெற்று வாழ்ந்திருந்தீர்கள்
ஊரோடு சேர்ந்தோரும் உறவுகளும் கலைஞர்களும்
வேரோடு கலங்குகின்றனர் நீவிர் பிரிந்த நினைவுக்காய்
யாரோடு போய் அழுவோம் உம் பிரிவையிட்டு
நீரோடும் விழிகள் இங்கு மிதமாய் கண்ணீருடன்
போராடும் களம் இழந்துஉ புலம்பெயர்ந்த காரணத்தால்
தீராத நோயுடன் போராடி திருவடி சேர்ந்தீர்கள்
மானிடத்து வாழ்வுதனில் மரணம் ஒரு முடிவல்ல
மாறாத துயர் கொண்ட எம் உறவுகளுக்கு
மீளாத துயில் எம்மை வாட்டி வதைக்கிறதே
கற்றவரும் உற்றவரும் மற்றவரும் நின் நற் பணிதனே
ஞாலத்திலும் மறவாமல் ஊனமுடைந்துருகி
காலத்தின் கோலத்திலும் கண்ணீரால் கழுவி அஞ்சலிக்கிறோம்
உங்கள் ஆன்மா இறைவன் சன்னிதியில் இளைப்பாறட்டும்
நித்திய இளைப்பாற்றியை அளித்தருளும் ஆண்டவரே