வியாழன் கவிதை

Jeya Nadesan

கவிதை நேரம்-19.05.2022
கவி இலக்கம்-1513
புரட்சியும் ஆட்சியும்
————————-
அவர்கள் அரசியல்வாதிகள்
நாட்டுப் பிரச்சினைகள் ஆட்சியில்
மக்களை ஆட்டிப் படைக்கும் ஆட்சி முறைகள்
மும் இன மக்களாலும் எழுந்த புரட்சி
விண்ணை நோக்கி எழுந்த குரல்கள்
போராட்டங்களும் குழப்பங்களும்
கண்ணீர் புகையும்,துப்பாக்கி சூடும்
சிறை பிடிக்கும் மரணக் கோலங்களும்
மனித நேயத்தை விரும்பாத ஆட்சி
சமாதானம் வேண்டி நல்ல ஆட்சி தேடினார்கள்
சமூகமாய் தொழிலாளர் சேர்ந்து போராடினார்கள்
கூக்குரல் எழுப்பி போராடி புரட்சி செய்தார்கள்
ஆட்சியாளர்கள் ஓடினார்கள் ஒளித்தார்கள்
பொருளாதாரம் பசி பட்டினி தெருவில் மக்கள்
இருண்டு கிடக்குது நம்ம தேசம்
நல்ல ஆட்சி வந்து நன்மை தருமா
வந்த ஆட்சி என்ன செய்யப் போகுது
கேள்விக் குறியோடு மக்கள் நிலமை