சந்தம் சிந்தும் கவிதை

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-26.04.2022
கவிதை இலக்கம்-172
ஏக்கம்
———–
பூமியிலே பிறப்பே ஏக்கம்
பிறந்து விட்டால்
எப்படி வாழ்வதென ஏக்கம்
இன்றை நிலையில்
பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே ஏக்கம்
உலக நாடுகளின் நிலமைகளையிட்டு ஏக்கம்
தொற்று போர் நிலைத்திடுமோ என ஏக்கம்
உயிர்களை நினைத்து ஏக்கம்
தனிமையிட்டு ஒவ்வொரு வினாடியும் ஏக்கம்
விடை காணுமட்டும் கேள்வியில் ஏக்கம்
வாழ்வின் இறுதி நிலைமையிட்டு ஏக்கம்
கடைசியில் சொர்க்கமா நரகமாவென ஏக்கம்
உயிரோடு ஒட்டி விட்ட ஏக்கம்
எப்போதும் எம்மை விட்டு பிரியாத ஏக்கம்