வியாழன் கவிதை

Jeya Nadesan

கவிதை நேரம்-21.04.2022
கவி இலக்கம்-1497
உடல் ஆரோக்கியம்
————————–
வாழ்க்கை பிரச்சினை இனிதானாலும்
குறுகியதாகவே முடிந்து போகிறது
வாழ்வியலில் நலமுடன் வாழ்ந்திட
வாழும்போதே ஆரோக்கியமாக
நலிந்த வாழ்வு பயன் பெற்றிட
நாளும் வேண்டும் நல்ல அப்பியாசம்
நினைவில் வேண்டும் சத்து உணவு
எண்ணத்தில் நல் சிந்தனையாக
நல்லவையே நினைத்திட வேண்டும்
வாழ்கின்ற வாழ்வுக்கு வரலாறு காண
வார்த்தையில் இனிமை பேச்சுமாக
ஒற்றுமை உணர்வு உள்ளத்தில் வேண்டும்
பெற்றதை பகிர்ந்து பெருமை சேர்த்தும்
நோய் தொற்று அணுகாமல் காத்தும்
சுத்தம் சுகாதாரம் பேணப்படல் வேண்டும்
வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்
சுத்தம் சுகம் தரும் கவனித்தல் வேண்டும்
உடல் ஆரோக்கியம் ஆயுள் கூட்டிடும்
சுகத்தை பெற்று இறைவழி தொடர்வோம்