சந்தம் சிந்தும் கவிதை

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-19.04.2022
கவிதை இலக்கம்-171
எதிர்ப்பு அலை
———————————
பூவும் பிஞ்சுமாய் பூத்துக் குலுங்கிய
எம் ஈழத் திருநாடு கேவல நிலையில்
மும் இன மக்களும் நடுத்தெருவில் இன்று
வான் அதிர கோஷமிட்டு கூக்குரல் எழுப்பி
வீதிகளில் எதிர்ப்பு அலைகளாகி குவிந்து
மனம் நிறைந்த கவலையுடன் ஆகினரே
நாட்டை கடன்காரனாக்கி
அண்டை நாடுகளுக்கு விற்றாகி
பிணைக்கும் உறவுகளை பிரிவுகளாக்கி
விலைவாசி அதிகமாகி உணவுகள் பற்றாது
பட்டினி பசியுடன் தெருக்களிலும்
வீடுகளிலும் அழுது புலம்பலிலும்
நிற்பதன கண்டு மனம் அழுகிறது
மனிதநேயத்தை தொலைத்து விட்டு
நாட்டையும் செல்லாக் காசாக்கி விட்டு
பஞ்சம் பசியறியாதார் கூட இன்று பசியுடன்
நடுத்தெருவில் நிற்க வேண்டிய நிலையாச்சு
தெருவெல்லாம் மக்கள் கூட்டும் அதிகமாச்சு
எங்கும் எதிர்ப்பு நிலை பெருகியாச்சு
நாளை நாட்டின் நிலைமை கேள்விக் குறியாச்சு
புலம்பெயர் மக்கள் பயணமும் தடையாச்சு