சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-12.04.22
கவி இலக்கம்-170
தேடினேன்
————————-
மழையும் குளிரும் சுழல் காற்றினிலே
கதிரவன் ஒளியை நாடி தேடினேன்
பட்டுக் காய்ந்த நின்ற மரத்தினிலே
பச்சையிலை துளிர்களை தேடினேன்
அலைமோதும் நீலக் கடனிலே
அமைதி நிம்மதி பெற தேடினேன்
ஒட்டகம் வாழும் வரண்ட பாலைவனத்திலே
பூஞ்சோலை வனப்பை தேடினன்
தனிமையில் ஒதுங்கி நின்ற நிலையினிலே
உதவி பெற மனித நேயத்தை தேடினேன்
இருண்டு மறைந்த வாழ்வினிலே
ஒளியான இடம் கிடைக்க தேடினேன்
மனம் சாந்தி பெற்று ஆறுதல் பெறுதலினிலே
இறைவனைக் கண்டு கொள்ள கோவிலில் புகுந்தேன்