சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-05.04.2022
கவிதை இலக்கம்-169
பட்டினி
—————-
வாழ்விலே வறுமையே வரவே கூடாது
வறுமையிலே பட்டினி கேடானது
அரசும் இயற்கையும் சூழலும் அனத்தமானது
கோடி மக்கள் கொன்றும் குவித்தது
ஆபிரிக்க நாடுகளில் பட்டினி சாபக் கேடானது
குஞ்சு குழந்தைகள் பட்டினியில் தினமும் இறந்தது
கர்ப்பிணி பெண்கள் பட்டினி சாவு பெருகியது
பசியாலும் ஊட்டச் சத்தும் குறைவானது
நிறை குறை பிள்ளைகள் பிறக்க நிலையானது
ஒரு வேளை சோற்றுக்கே கை நீட்டிய பாடானது
கோவில்களில் பணங்கள் உண்டியல் நிறைவானது
பால் பழம் சாமிக்கு அபிசேகமானது
வயிற்றுப் பசியால் குழந்தைகள் பாலின்றி மரணமானது
வீடுகளில் அளவுக்கதிக சமையல் குப்பைக்கு போனது
பணக்காரர் வீடு கதவு பூட்டும் நிலையானது
ஏழைகள் வயிறு பட்டினியால் ஒடுங்கியது
உலகில் மக்கள் பட்டினிச் சாவு அதிகமானது