வியாழன் கவிதை

Jeya Nadesan

கவிதை நேரம்-31.03.2022
கவி இலக்கம்-1485
மூத்தோர் வாழ்வில்
—————————-
வருடந்தோறும் மூத்தோர் மாதமே
பங்குனி மாதம் பாமுகத்தின் நினைவிலே
அன்பில் அரவணைப்பில் வாழ்ந்தவர்கள்
தம் அனுபவங்களை விட்டுச் சென்றவர்கள்
ஆடுகிற ஆட்டம் ஆடி ஓடிய ஓட்டம் ஓடி
வயதானதும் தனிமை நாடி
ஓய்ந்திருந்து இறைவனை பாடி
துன்பங்களை ஏற்றி போற்றி
இம்மையில் நன்மை செய்து
ஓகோ என்று வாழ்ந்த மனிதன்
மாறாத அன்பை பொழிந்து
பிள்ளைகளை வளர்த்தெடுத்து
காவோலை விழ குருத்தோலை சிரிக்குமளவிற்கு
பெற்றோரை மதிக்காத பிள்ளைகளாக
ஏன் இந்த நிலை ஏன் இந்த கோலமோ
நடை தளர்ந்து கூனி குறுகி போனாலும்
நினைவாற்றல் அனுபவங்கள் குறையாதே
பரம்பரைக்கென நட்ட மரங்கள்,செடிகள்
வரலாறு கூறி வாழ்த்து சொல்லுமே