சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-29.03.22
கவி இலக்கம்-168
பொங்கியதே பூகம்பம்
—————————————–
எமையாண்ட காலம்
காலமது கடந்து போச்சு
காலத்தை நாமாளும் காலமும்
இப்போது நடை முறையில் வந்தாச்சு
தாயகத்திலே பூகம்பமும் எழுந்தாச்சு
அரசாட்சி தலை கீழாக மாறியும் போச்சு
நாடே கடனாகி நடுத்தெருவிற்கு வந்தாச்சு
போராட்டங்களும் பூசல்களும் எழுந்தாச்சு
நாட்டிலே பஞ்சமும் பட்டினி நிலையாச்சு
தஞ்சம் தேடி அயல் நாடு போகும் காலமுமாச்சு
மின்சாரம் வெட்டு டீசல் பெற்றோல் குறைவாச்சு
உணவு பண்டங்கள் விலைவாசி அதிகமாச்சு
மக்களின் நாளாந்த சீவியம் கேள்வி குறியாச்சு
கவலையுடனும் கண்ணீரான வாழ்வாச்சு
சமாதானம் வேண்டி நின்றோர் ஏமாற்றமுமாச்சு
நாளை என்ன நடக்குமோ என கேள்வி நிலையாச்சு