சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-15.03.2022
கவி இலக்கம்-166
மனித வாழ்வு
——————————–
பிறப்பு உண்டானால் இறப்புண்டு
இரண்டிற்கும் நடுவிலே தானே
எமக்கும் இறைவன் அழைப்புமுண்டு
அழைத்து எம்மை தன் அருகிலேதானே
வைத்திருக்க ஆள்பவர் உரிமையுண்டு
உலகினை மாற்றிட சக்தியுண்டு
உண்மையில் வாழ்ந்திட பலமுமுண்டு
அழைப்பவர் கையில் ஆயுதமுமில்லை
வறுமைகள் வாட்டிடும் தொல்லையுமில்லை
கஸ்டங்கள் கலந்து கவலைகள் இல்லை
சிந்தனையில் இறைவனை வரவேற்று
முத்தி பெறவே அமைதி வாழ்வை பெற
புண்ணியம் சேர்த்து வாழ்வோம் மனிதனே