கவிதை நேரம்-10.03.2022
கவி இலக்கம்-1473
உன்னதமே உன்னதமாய்
——————————–
பசுந்தீவு எனும் நெடுந்தீவிலே அவதரித்து
ஆசிரிய மணிகளு்க்கு மூன்றாவது பிள்ளையாகி
கண்ணியமாய் கலாசாலையில் கற்று
தலைமை ஆசிரியைத் தொழில் சேவகியாய்
மனத்தினிலே இறையன்பை நிறைவாக்கி
அகத்தினிலே ஆன்மீகத்தை பதிவாக்கி
பண்புடைய தூய உள்ளத்தின் சகோதரியாய்
ஆன்மீக பணி தன்னில் அன்னையாய்
சாதனைக்கு என்றும் மகுடாய்
சரித்திரம் உமக்குண்டு என்றும் இமயமாய்
கலங்கரை விளக்கமான கல்வியை
கண்ணியமாய் காலமெலாம் கொடுத்தீர்
ஊரெல்லாம் சுழன்று சேவையில் மகிழ்ந்திடுவீர்
சலிக்காத பணியின் தொடர்பால்
சரித்திரம் படைத்திருந்தீர் சான்றுகள் பெற்றீர்
உன்னதமே உன்னதமாய் சமூகத்திலும்
உடன் பிறப்பாய் உயிராய் நீங்களும் நாமும்
உம் சீரிய பாதையில் இறைவனடி சேர்ந்தீர்
ஆன்ம ஈடேற்றம் பெற பிரார்த்திப்போம்