வியாழன் கவிதை

Jeya Nadesan

வியாழன் கவிதை நேரம்-09.03.2023
கவி இலக்கம்-1654
நிமிர்வின் சுவடுகள்
—————————-
கார்த்திப் பரியாரியார்-எனப்
பெயர் கொண்ட அப்புவை
மூத்த மகளின் புத்திரி பேத்தி நான்
கடந்த காலத்தை திரும்பி பார்க்கையில்
அப்புவின் நிமிர்ந்த நடையும்
வெள்ளைத் தோலும் தூய்மை உள்ளமும்
வெள்ளை வேட்டி ஒரு துண்டும்
தோளிலே சுற்றி போர்த்தபடி
காதிலே குண்டலக் கடுக்கனும்
தலைவாரி சிறு குடும்பியும்
தாண்டி தாண்டி மெல்ல நடையும்
உதயத்தில் வீட்டிலிருந்து வெளிக்கிட்டு
ஆலமரத்தடி வரை சிறு உலாத்தலும்
என் அப்புவின் சிறப்புக்களே
அன்பு ஆதரிப்பு வைத்தியமும் மருந்தும்
மாத்திரை செப்பும் வாகடமும் கையில்
கை வைத்தியம் சிறந்து விளங்குமே
தினமும் நினைவில் வரா விடினும்
நினைவு வரும் போதெல்லாம்
சாதனை சரித்திரம் முன்னின்று வழி காட்டுதே
நிமிர்ந்து நின்று நித்தம் உழைத்து
ஊருக்கு பெரும் பெயரானவரே
நிமிர்வின் பாதைகள் மறக்க முடியலையே
எம்முடன் வாழ்ந்து மறைந்து போன சுவடு
தெரியா வண்ணம் நாமும் வளர்ந்து விட்டோமே