வியாழன் கவிதை

Jeya Nadesan

கவிதை நேரம்-23.02.2023
கவி இலக்கம்-1646
தமிழே வாழ கும்மியடி
——————————
தமிழே உலகின் தமிழ் மொழியாம்
தமிழர்கள் பேசும் தாய் மொழியாம்
அமுதம் போன்ற தேன் மொழியாம்
எட்டுத் திக்கும் முழங்கி ஒலித்திட
தமிழனின் இலட்சியம் நிறைவேற
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி நின்று கும்மியடி கும்மியடி
அன்னை மொழி அழியா வண்ணம்
காத்திடவே எழுதி படித்திடுவோம்
இளையோர் ஆக்கங்கள் எழுதிட
அன்னை மொழி அழியா வண்ணம்
வீட்டிலே தமிழ் மொழி பேசிட
ஆனந்த வாழ்வு மலர்ந்திடவே
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி நின்று கும்மியடி கும்மியடி
தமிழர் மானம் காத்திடவே
தமிழ்மொழியை வளர்த்திடுவோம்
சத்தியம் எடுத்து கும்மியடி
தலை நிமிர்ந்து நின்றிடவே
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி நின்று கும்மியடி கும்மியடி