வியாழன் கவிதை

Jeya Nadesan

கவிதை நேரம்-16.02,2023
கவி இலக்கம்-1942
புழுதி வாரி எழும் மண் வாசம்
——————————-
மண் வாசமே மண் வாசமே
எந்த மண் புழுதி வாரி மண்ணே
மண் வாசம் மறக்க முடியலையே
பிறந்த மண்ணை பிரிந்தவள் நான்
புழுதி வாரி மண்ணை மறக்கலையே
நீ எங்கே இருக்கிறாய்
மழைக்கு முன் மணக்க வைப்பாயே
புழுதி அளைந்து புரண்டு
ஓடியாடி புழுதியில் குளித்து
அம்மாவிடம் அடி வாங்கிய
வளர்ந்த பெண்ணல்லவா நான்
கோழி மண் கிளறி சாம்பல் குளிக்குமே
வேடிக்கை பார்த்தவள் நான்
எந்தன் மண்ணை எழுத எழுத
உன் வாசம் என் சிந்தனையில்
சிலிர்க்க வைக்குதே
மண் வாசமே எம் தாய் மண்ணே
நெய்தல் மருதம் சார்ந்த பெருமையே
மாமரத்து நிழலிலே பாய் விரித்து
மெல்ல சாய்ந்து தூங்கையிலே
உன் புழுதி வாசனையை
எப்படி நான் எடுத்து சொல்வேன்
முற்றத்து மண் புழுதிப் புல்லும்
கால் பட்டு மிரித்தாலும் நிமிருமே
எப்படி நீ நிமிர்ந்திடுவாயோ
நிலா வெளிச்சம் காணும் மண்ணே
வாசமுள்ள மண்ணே என் நினைவிலே
உறங்கும் வேளையில் கனவில் வருவாயே
அழகான அந்த புழுதி மண் வாசனை
அடிக்கடி நினைவில் வரும்
அடிக்கடி நினைவில் வரும்