சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-22.11.2022
இலக்கம்–201
கனவு மெய்ப்பட வேண்டும்
———————————————
மனதினில் நல்ல உறுதி வேண்டும்
சொல் செயல் உண்மை உரைத்திட வேண்டும்
அன்பு நதி பெருகிட வேண்டும்
ஒற்றுமை கூடி உழைத்திட வேண்டும்
கல்வி செல்வம் பெருகிட வேண்டும்
அறிஞன் என்ற விதை முளைத்திட வேண்டும்
நாட்டில் நல் தலைவர்கள் தெரிவாக வேண்டும்
நாடு வளம் பெற்று சிறப்புற வேண்டும்
புலம்பெயர் நாட்டில் இரவு பகலாய் உழைத்திட வேண்டும்
தாயக மக்களின் பசி போக்கிட வேண்டும்
பத்து மாதம் சுமந்தவளை வணங்கிட வேண்டும்
காப்பகங்களில் விடாது காத்திட வேண்டும்
காலையில் கதிரவன் ஒளி மிளிர்ந்திட வேண்டும்
ஒவ்வோர் மனைகளிலும் ஒளி பிரகாசிக்க வேண்டும்