சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-14.02.2023
கவிதை இலக்கம்-210
மாசிப்பூ
—————-
மாசிப்பனி மூசிப் பெய்யும்
அதிகாலை பூப்போல கொட்டும்
புல் நுனியில் பனி மின்னி ஒளிரும்
பூவில்லா மரமெலாம் பனிப் பூவாய் மலரும்
பனிக்காலம் கோணி சாக்கு
தலைக்கு கவசமாய் அமையும்
பனி படரும் காலங்கள்
தெருவெல்லாம் வழுக்கும்
அதிகாலை இருளும்
மந்தாரம் தோன்றும்
காற்றும் வெண்பனி
இடையிடையே
தூறலும்
சோர்வும் களைப்பும் வரவே
கிழக்கு வானம் சிவந்து
கதிரவன் அறிகுறி
தோன்றும்
ஆறுதலாக ஒளிர்ந்து
வெண்பனியாய் கரைத்து
செல்லும்
கதிரவன் அறிகுறி தோன்றும்