கவிதை நேரம்-09.02.2023
கவி இலக்கம்-1638
காலநிலை மாற்றம்
——————————–
மந்தாரமும் மழையும் கடும் குளிரான காலநிலை
வெப்பமினறி நடு நடுங்கும் உடல் நிலை தாக்கம்
வைரஸ் என்ற புதிய உவாதை இருமல் காய்ச்சல்
உலகளவில் காவு கொண்டு மூழ்கி கிடக்கிறது
மரஞ்செடி கொடிகள் கூட சோர்ந்து போயின
பனித்துளிகள் படர்ந்து பூப்போல காட்சிகள்
பறவையினம் உயிரினம் ஒதுங்கிய நிலையில்
மலர்ந்து சிரிக்கின்ற பல வர்ணப் பூக்கள்
தலை கவுண்டு மொட்டையாக போனதாய்
இசை பாடித் தேன் சேகரித்த தேனீக்கள் கூட
மகரந்தச் சேர்க்கையை மறந்து போனதே
குளிர் பனி மழை வெயில் குளிர் காற்றும்
கோலம் மாறி பருவ மாற்றம் தாண்டவமாடுவதில்
வீடுகளிலே மக்கள் முடங்கிய கோலமாய்
பலம் இழந்தவர்களாய் பொருட்கள் விலையேற்றம்
காலநிலை மாற்றம் மக்கள் நிலை பரிதாபமே