சந்தம் சிந்தும் கவிதை

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-07.02.2023
கவி இலக்கம்-209
நிச்சயதார்த்தம்
————————–
தவப்பேறு இரட்டைக்கு
தரணியில் நிச்சயதார்த்தம்
பெற்றோர் ஒன்று சேர்ந்து நடக்கும்
அற்புத நிச்சயதார்த்தம்
இல்லறமே நல்லறம் புகும்
நம்பிக்கையான நிச்சயதார்த்தம்
பெற்றோர் மனங்குளிர
நடந்தேறும் நிச்சயதார்த்தம்
வாழ்க வளமுடன் வாழ்த்தும்
உறவுகள் பெரியோர்கள்
ஆசீர் கொடுத்திட
ஆரவார நிச்சயதார்த்தம்
சொர்க்கத்தில் முத்திரை
குத்திய நிச்சயதார்த்தம்
கணையாளி பூண்டு களிப்புடன்
திருமண பந்தத்தின் அத்திவார
ஆரம்ப நிச்சயதார்த்தம்
உறவுகளும் மனப் பூர்வமாய்
ஆசீர் அளித்து இணைக்க வைக்கும்
அழகான நிச்சயதார்த்தம்
வாழ்க வளமுடன் என
கை கூப்பி அருள் வேண்டி
வாழ்த்தும் நிச்சயதார்த்தம்
ஜெயா நடேசன் ஜேர்மனி