வியாழன் கவிதை

Jeya Nadesan

கவிதை நேரம்-02,02.2023
கவி இலக்கம்-1934
சுதந்திரமாமே
———————
யாருக்கு சுதந்திரம்
எங்கே சுதந்திரமாமே
பல் வளங்களாலும் நிரம்பிய
எம் தாய்த் திருநாடே
தமிழருக்கென இல்லாத சுதந்திரம்
பொருளாதார வீழ்ச்சியிலே
தாயகமே பசி பட்டினி வறுமை கோட்டினில்
வாடி வதங்கி உயிரற்ற நிலையில்
75வது சுதந்திரத் தின விழா தேவையோ
பல கோடி பணம் செலவில் கொண்டாட்டமோ
ஊழல்கள் காரணமாக மீட்க முடியாத நிலையில்
மறுப்பு தெரிவித்து போராட்டங்கள் பல
சுதந்திரத்திற்காக போராடும்
இலட்சியவாதிகள் அழியலாம்
சுதந்திர வேட்கை எம் மக்களிடையே
அழியவே அழியாதே
தமிழ் மக்களின கனவு சுதந்திரமே
போராடிப் பெறுவதே
போராடி மரித்த மாவீரர்கள்
அடைய முடியாமற் போனதை
எம் சந்ததிகள் போராடி
பெறுவதை நாம் பார்த்திருப்போம்
சுதந்திரத்திற்காக உயிரை தியாகம்
அவர்களின் சுதந்திரப் பயிர்களின் விதைகளை
வருங்காலச் சந்ததிகள் முளைக்க வைக்கும்