சந்தம் சிந்தும் கவிதை

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-31.01.2023
கவி இலக்கம்-208
விருப்பு
—————-
விருப்பு வெறுப்பை விட்டு
அன்பை பகிர்ந்து கொள்வோம்
போரும் பூசலும் அழிவும்
உலகில் தாண்டவமாட
மக்கள் மத்தியில் பயமும்
வெறுப்பே வாழ்வில் உச்சமாகிறது
வைரசின் தொற்றுக்கள் புதிது புதிதாக தோன்ற
வாழ்வில் வாழ விருப்பு அற்று போகின்றது
போதை வஸ்து பாலியல் கொடுமை
வெட்டுக் கொத்து களவு
இளையோர் விருப்பில்
பெற்றோர் வெறுப்பு நிலையில்
பொருளாதாரம் பிரச்சினையில்
வேலையற்றோர் இளையோரில்
வாழ்வில் வாழ விருப்பற்று
தற்கொலையில் முடிவாகுதே
அரசியல்வாதிகளின் நல்ல
செயலற்ற நிலையில்
மக்களின் வாழ்வில்
விருப்பற்ற நிலையில்
நல்ல முடிவுகளற்ற நிலையில்
வியக்கும் நாமும்
யெயா.நடேசன் யேர்மனி