கவிதை நேரம்-18.01.2023
கவி இலக்கம்-1626
பெருகிடும் வாழ்க்கை
பெற்றுயர தடையேது
————————————–
நாளைய உலகு நமக்கென்றே மலரும்
இன்றைய பொழுதை நம்பிக்கையாய்
பெற்றுயர விழிப்புடன் விழித்தெழுவோம்
முயற்சியே செய்யாமல் உழைப்பில்
சோம்பேறித்தனமே தோல்வி ஆகிடுமே
தொற்று நோய் திரும்ப வந்திடாதிருக்க
கட்டுப்பாடுகள் கடைப் பிடிக்க தவறி
விட்டுப் போய் மறந்து போகையில்
வாழ்க்கை பெற்றுயர தடையானதே
பாலியல் வன்முறைகள் அதிகரிக்கை
ஒழுக்கம் தவறிய நிலைஉயர்வானதோ
போதை வஸ்து பாவனை அதிகரிப்பு
உயிர்களே கொன்று அழி்க்கும் அளவில்
நாட்டுத்தலைவர் கொடுங்கோலாட்சி
மக்களிடையே விழிப்புணர்பற்ற நிலையே
இணைய வழியிலே ஈர்ப்பினை வளர்த்து
வருங்கால வலிமை நசுங்குது வாழ்க்கை
சாதனகள் புரிந்து சரித்திரம் படைக்க
எண்ணங்கள் ஏற்றம் பெற்றிட விழித்தெழு மனிதா