முதல் கண்ட முத்தே ஜெசிக்கா
அப்பா உன்மீது கொண்ட பாசத்தால்
வலிகள் சுமந்து விழிகள் நனைந்து
உன்னைத் தேடுவதை நீயும் அறியாயோ !
பகல் இரவாய் படும் துயரால்
உன் நினைவை இதயத்தில் வைத்து
உள்ளம் அனலாய் கொதித்து எழ
நாம் தனிமையில் வாடுவதைப் பாரம்மா !
பலமான காற்றைப் போல
உன் மரணமோ எமை சாய்த்ததம்மா
நிலையற்ற வாழ்விலே
ஆண்டுகள் பலவாய் கடந்த போதும்
ஆறவில்லையம்மா உன் நினைவலைகள்
வாழ்வு என்றும் எமக்கு இருட்டே !
நீயில்லா வாழ்வு எற்றும் எமக்கு இருட்டே!
நீயில்லா வாழ்வு என்றும் எமக்கு இருட்டே!
கவியாக்கம்..றாஜினி அல்போன்ஸ்.
குரல்.றஜனி அன்ரன்.
- 24/01/2023
- அப்பா.அல்போன்ஸ் அம்மா.றாஜினி தங்கை.ஜெனிற்ரா.
ஜெசிக்காவை நாமும்
நினைவு கூறுகின்றோம்
ஓம் சாந்தி
ஓம் சாந்தி. ஓம் சாந்தி. ஓம் சாந்தி. ஜெசிக்காவை நாமும் நினைவு கூருகின்றோம்.ஆறுதல் அடையுங்கள். ராஜினிஅல்போன்ஸ்
ஓம் சாந்தி 🙏
றாயினிஅக்காவிற்கு ஏன் இப்படிஒரு துயரம்.
ஆறுதல்படுத்தும் ஆண்டவரே.
ஜெசிக்காவை நாமும் நினைவு கூருகின்றோம்.ஆறுதல் அடையுங்கள் ராஜினி அக்கா.
ஓம் சாந்தி. ஆறுதல் அடையுங்கள். அவரின் ஆத்மா அமைதியடைந்திருக்கும்.