கவிஇலக்கம் -169. 14.04.2022
„சிறப்பு குழந்தைகள்”
ஞாயிறு தோறும் சிறப்புக் குழந்தைகள்
ஞானக் கொண்டாட்டம் சிறகடித்து
தீவிரப் பயிற்சி தீரா தொடர் முயற்சி
கூவி அழைத்து கொஞ்சிடும் மகிழ்சி
சுயகதை பேச்சு சுதந்திரப் பயிற்சி
வியத்தகு வெற்றி வேதனை போக்கி
அன்பாய் பல வார்த்தை அழகாக பேசி
துன்பம் மறந்து துணிவு பிறந்தன
ஆட்டம் பாட்டம் அவரவர் திறனுக்கேற்ற கொண்டாட்டம்
நாட்டம் இணைவதில் நட்புடன் உறவு ஆட்டம்
மாற்றம் தந்திட்ட மதியின் ஊட்டம்
ஏற்றம் பெற்றனர் எடுத்தியம்பி பாடிட
தினமொரு ஊக்க திறனாய்வு பயிற்சி
சினமின்றி மாமா சிரம் போற்றச் செய்தார்
ஓய்வின்றி உழைக்கும் உன்னதர் பணியாளர்
ஆய்ந்தனர் நற்பலனை அளவற்று மகிழ்ந்து
நல்வழிபடுத்தும் நம் ஆசான்கள் மாமா மாமி
சொல் வளம் மிக்கவர் சுந்தரத் தமிழர்
வாழ்க வாழ்கவென வார்த்தை மலர் தூவி
வாழ்த்திப் போற்றிடுவோம் வான்புகழ் தளத்தினை
வாணி அக்கா …கவிப்பார்வை
நகுலா அக்கா அவர்களுக்கும் என் நன்றிகள்🙏💖