29.05.13 Wednesday FA Tv Tamil : Programes

29.05.13 Wednesday FA Tv Tamil : Programes

Surekka 29.05.13 Wednesday Happy 18th Birthday Wishes:
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=WOpYqa3lSjg”]
 
29.05.13 புதன் ஓவிபி 596 பகுதி 3 : தொகுப்பு: நடா மோகன்
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=PPeNG7yUT3g”]
29.05.13 புதன் ஓவிபி 596 பகுதி 4 : தொகுப்பு: நடா மோகன்
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=h0W1NZpcigE”]
 29.05.13 புதன்கிழமை  சிந்தனைகள் : தொகுப்பு: ஷைய்பா 1
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=rpXeU8cLliE”]
 29.05.13 புதன்கிழமை  சிந்தனைகள் : தொகுப்பு: ஷைய்பா 2
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=DZ-Ez-PsXhg”]
 29.05.13 புதன்கிழமை  சிந்தனைகள் : தொகுப்பு: ஷைய்பா 3
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=ybnLPPPW1Io”]
 29.05.13 புதன்கிழமை  சிந்தனைகள் : தொகுப்பு: ஷைய்பா 4
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=JmwWqAP5Mdo”]
 29.05.13 புதன்கிழமை  சிந்தனைகள் : தொகுப்பு: ஷைய்பா 5
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=uKuolg8QDMU”]
 29.05.13  புதன் : தகவல் துளிகள் :  தொகுப்பு : ஷைய்பா
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=0q7UpY3ROgw”]
 29.05.13  புதன் இலக்கியம் + சரிதம் : தொபகுப்பு  : ஷைய்பா
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=jTGcWTDi8zw”]
29.05.13  புதன் : குடும்பம் குவலையம் : தொகுப்பு : நகுலா 1
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=OaH1Pc_RZm4″]
29.05.13  புதன் : குடும்பம் குவலையம் : தொகுப்பு : நகுலா 2
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=3tEUqjD-NrQ”]
29.05.13 புதன் : “சரிதம”  : தயாரிப்பு : ஷைய்பா
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=oDS7TGnN4WY”]
29.05.13 புதன் “தகவல்சாலை” : தொகுப்பு : யோகரட்ணம்
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=S-WD8WucfBQ”]
 

+++++   ####   +++++

29-05-13 பேசும் நேரம்‏:

பேசும் நேர சிந்தனை விரிப்புக்கான சின்னச்சின்ன தலைப்புகள்……..
ஒரு முறைக்கு இரண்டு முறையாக உள்வாங்குங்கள்…….
உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்.. மட்டுமல்ல… வானலைக்கு வாருங்கள்.
சிறப்பாக பயனுள்ள பல பக்கங்களைத் தொட்டுக் கொள்வோம்…..
இணைப்புக்கு.. 0044 208586 9636 – 2081332718
Skype Id -londontamilradio

——————————————————————————————————————————————————————————————————————————–
பிறர் முதுகுக்கு பின்னால் நாம் செய்ய வேண்டிய வேலை தட்டிக் கொடுப்பது மட்டும்தான்..

——————————————————————————————————————————————————————————————————————————–
இந்தக் கதையினை அவதானமாக படியுங்கள்…..நச் சென்ற ஒரே வார்ததையில் அல்லது. வானொலி வாக்கு பாணியில்
ஒரு தலைப்புக் கேட்டால் எதைச் சொல்லி கதைக்கு பொருத்ததப்பாட்டினைத் தரலாம்..என்று நினைப்பீர்கள்……
இந்தக் கதையின் பக்கமாக உங்கள் கருத்துக்களை இணைக்கலாம்..
மூன்று நான்கு சொற்களை வைத்து வானொலி வாக்குப்பாணியில் .. பொருத்தமான ஒரு வாக்கையும் இணைக்கலாமே..
மிக ஆவலாக இருக்கிறேன்.. உங்கள் கற்பனையில் விரியும்..அந்த தலைப்புக்காக……..

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான்.
மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.
சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு “யாராவது காப்பாற்றுங்கள்’ என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.
தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. “பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு” என்று கோபத்துடன் கேட்டான்.
பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு “நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்” என்று எச்சரித்தான்.
பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். “ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?” என்றான்.
பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே “தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்” என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.

பெரியவர் விளக்கினார். “நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்” என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்.

————————————————————————————————————————————————————————————–

அனுபவத்தை பகிருங்கள்……..

சமயங்களில் யாரை நாம் துச்சமாக எண்ணுகிறோமோ.. அவர்கள் மிகச் சக்தி மிக்கவர்களாக .. ஆபத்துக்கு கரம் கொடுப்பவர்களாக
ஆகிவிடுவது உண்டு… இனி இவர் சங்காத்தமே வேண்டாம்.. “ இவர் எனக்கு பண்ணினது எல்லாம் போதும்.. இனியும் வேண்டாமடா.
திருத்தவே முடியாது .. இனி வேண்டாமப்பா சகவாசம்……
இப்படி எல்லாம் பேசி சிலபேரை தள்ளி வைக்கிறோம்.. கண்டு கொள்ளாமல் இருக்கிறோம்….
ஆனால் சிலசமயங்களில் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத விதமாக அவர்கள் உதவி , ஒத்தாசை நம்மை வந்து சேறும் போது..
“அடடா…..” என்று நாம் நாணிக் கோணும் ஒரு நிலை நம்மையே ஒர கணம் தலை குனிய வைத்து விடுகிறது..
இந்த மாதிரியான சிக்கலில் மாட்டுப்பட்டு நீங்கள் தலைகுனிந்த அனுபவங்கள் உங்களில் இருக்கிறதா..? அல்லது உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நீங்கள் பார்ததது கேட்டது உண்டா…..?

அப்படி என்றால் உங்கள் சிந்தனைத் தட்டி சுருக்கமாகச் சொல்லலாமே……………
——————————————————————————————————————————————————-
நன்றி
சைபா மலீக்
———–