28.05.13 Tuesday FA Tv Tamil : Programes

28.05.13 Tuesday FA Tv Tamil : Programes

28.05.13 செவ்வாய்: ஓவிபி 596 பகுதி 1:  தொகுப்பு நடா மோகன்

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=TEO-nTRzmAk”]

28.05.13 செவ்வாய்: ஓவிபி 596 பகுதி 2:  தொகுப்பு நடா மோகன்

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=XtLb-OAQjKQ”]

28.05.13 செவ்வாய் : பாடல்கள் + சிந்தனை 1 : தொகுப்பு: ஷைய்பா

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=fGGwBCz-PTg”]

28.05.13 செவ்வாய் :  சிந்தனை 2 : தொகுப்பு: ஷைய்பா

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=ko5Abj3neB8″]

28.05.13 செவ்வாய் :  சிந்தனை 3 : தொகுப்பு: ஷைய்பா

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=35kJGu2hlhU”]

28.05.13 செவ்வாய் :  சிந்தனை 4 : தொகுப்பு: ஷைய்பா

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=rKcMkHQ_BoM”]

28.05.13 செவ்வாய் :  சிந்தனை 5 : தொகுப்பு: ஷைய்பா

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=_iAb2QXaIEs”]

28.05.13  : இளையோர் தகவல் பூங்கா: தொகுப்பு: ஷைய்பா

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=DF_dabKJ_Fw”]

28.05.13 :  விந்தைச் செய்திகள் : தயாரிப்பு : ஷைய்பா

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=YSRBpwrRauA”]

28.05.13 “கதம்ப மாலை” பகுதி 1 : தொகுப்பு : புஸ்பவதி சிவநாதன்

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=B9Sfe-OF7rM”]

28.05.13 “கதம்ப மாலை” பகுதி 2 : தொகுப்பு : புஸ்பவதி சிவநாதன்

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=C2JsJudxVTg”]

28.05.13 “கதம்ப மாலை” பகுதி 3 : தொகுப்பு : புஸ்பவதி சிவநாதன்

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=I8lSdeQddQg”]

மிக்க நன்றி

+++  +++

   28-05-13 Pesum Neram .. sinthanaigal‏:
கீழ்வரும் தலைப்புகளை உள்வாங்கி… உங்கள் சிந்தனைகளை விரித்துக் கொள்ளுங்கள்….
உங்கள் பதில்களை இணையத்தில் எழுதுங்கள்…. 0044 208586 9636 , 0208133 2718
Skype:  londontamilradio .. இணைப்புக்களை பயன்படுத்தி வானலையில் இணைந்து பேசுங்கள்…….
——————————————————————————–

நாம் விரும்பி பெறும் எதையும் மறப்பதில்லை..
தானாக கிடைக்கும் எதையும் மதிப்பதில்லை…
.
———————————————————————————————————————————————————————————–

ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம்.
வழக்கம் போல் அன்றும் சாளரத்தைத் திறந்த அரசருக்கு ஏமாற்றம்! சூரிய உதயத்துக்குப் பதில் அவர் கண்களில் ஒரு பிச்சைக்காரன் தான் தோன்றினான். போயும் போயும் இவன் முகத்தில் தான் விழிப்பதா என்று கடும் வெறுப்புடன் திரும்பினார் அரசர். திரும்பிய வேகத்தில் சுவற்றில் அவரது தலை அடிபட்டு இரத்தம் கொட்டியது..வலியோ பொறுக்க முடியவில்லை. அத்துடன் கோபம் வேறு பொங்கியது…
பிச்சைக்காரனை இழுத்து வருமாறு கட்டளையிட்டார். காவலர்கள் அவனை இழுத்துக் கொண்டு வந்து மன்னர் முன்னே நிறுத்தினர். அரச சபை கூடியது. தனது காயத்துக்கு காரணமாக இருந்த அந்த பிச்சைக்காரனை தூக்கிலிடுமாறு தண்டனையும் கொடுத்தார்.
பிச்சைக்காரன் கலங்கவில்லை; கலகலவெனச் சிரிக்கத் தொடங்கினான். சபையில் இருந்தவர்கள் திகைப்புடன் விழித்தனர். அரசனுக்கோ, கோபம் கட்டுக்கடங்காமல் போய் விட்டது…பைத்தியக்காரனே! எதற்குச் சிரிக்கிறாய் என்று ஆத்திரத்துடன் கேட்டார்.
அரசே…! என் முகத்தில் விழித்ததால் உங்கள் தலையில் சிறு காயம் மட்டும் தான் ஏற்பட்டது. ஆனால், உங்கள் முகத்தில் நான் விழித்ததால், என் தலையே போகப் போகிறதே…அதை நினைத்தேன் சிரித்தேன் என்றான். மன்னன் தலை தானாகவே கவிழ்ந்து விட்டது. தவறை உணர்ந்தவன் தண்டனையை ரத்து செய்து பிச்சைக்காரனை விடுவித்தான்.

உங்கள் சிந்தனைகளை கதையின் கருவோடு இணைந்து பேசுங்கள்……..

————————————————————————————————————————————————————————————————————-

பேச்சு என்பது ஒரு கலை. பேசும் வார்ததை என்பது அதன் தொனியைப் பொருத்தும், தோரணையைப் பொருத்தும்
வித்தியாசமாகச் சென்றடையும். சிலநேரம் மனதால் ஒன்றை நினைத்து, பேசும் போது எதை எல்லாமோ பேசி விடுகிறோம்..
எல்லாம் முடிந்து இறுதியில் பார்க்கும் போது சொன்ன விடயம் ஒன்றுதான். ஆனால் இன்னும் கொஞ்சம் நாகரீகமாகப் பேசியிருக்கலாமோ என்கிற மாதிரி தோன்றும். யோசிக்காமல் பேசுகின்ற வார்ததைப் பிரயோகங்களில் சிலதை நான் தருகிறேன்.. இதனை இங்கிதமாக . நாகரீகமாக  நீங்கள் பேசுவதாயின் எப்படிப் பேசுவீர்கள்……..

இலகுபடுத்துவதற்காக ஒரு உதாரணம் தருகிறேன்…….
உங்களோடு சேர்ந்து பயணம் செய்வதற்காக ஒருவர் கேட்கிறார்…….
உங்கள் காரில் இடம் இருக்கா என்று.. அதற்கு நீங்கள் கார்ல இட்ம இல்ல.. என்று சொல்கிறீர்கள்….
ஆனால் இதற்கு இங்கிதமான.. நாகரீகமான பதில் …..இடம் இருக்காதென்று நினைக்கிறேன்…..
(வார்த்தைப் பிரயோகத்தில் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது பாருங்கள்..)

அழகான இங்கிதமான வார்ததைகளைக் கண்டு பிடியுங்கள்…..
1. என்னைக் கேட்காம ஏன் முடிவு எடுத்தீங்க…..?
2. என்னை ஏமாத்திட்டீங்களே…
3 உங்கள நம்பி நான் இல்ல….
4 உங்களக்கு ஏன் உதவணும்..?
5. நான் ஏன் உங்களுக்கு கொடுக்கனும்…..?

அட நிறைய யோசிக்காதீங்க…….. அடிக்கடி நானும் நீங்களும் உபயோகிக்கும் வார்ததை பிரயோகங்கள் தான் இவை.
சின்னதாக யோசிங்க.. பதிலை இங்கேயும் எழுதுங்கள்..வானலைக்கும் இணைப்புகளினைத் தொட்டு எடுத்து வாருங்கள்……..

நன்றி…
சைபா மலிக்