சக்தி சிறீனிசங்கர்

இனிய இரவு வணக்கம்! சந்தம் சிந்தும் சந்திப்பு! கவித்தலைப்பு விடியல்! (குறட்டாழிசை) பகலது தொடரா பரிதியும் மறையும் / நகருமே நாளும் நாளைய விடியலை/ நோக்கி நமக்குள் நொந்து போகா/ ஊக்கம் வேண்டும் உறுதி வேண்டும்/ காயம் இல்லா காலம் இல்லை மாயம் ஏதும் மருந்தும் ஆகா/ ஏற்றம் இறக்கம் ஏற்றுக் கொண்டு/ மாற்றம் வேண்டும் மனத்தில் உறுதி/ கொண்டே வாழ்வில் கொள்கை உடனே/ விண்ணைத் தொடவே வீறு நடையும்/ வலிகள் தாங்கி வழியது தேடி/ கலியது […]

க.குமரன் 21.3.23

சந்தம் சிந்தும் வாரம் 215 விடியல் ஆயுதம் ஏந்தி அவனியில் கொலைகள் ஆனது என்னவேனில்! அழுத்த மனங்கள சீர் கொண்ட சித்தம் பாரது சீரழிக்கும் ஆயுத அனுமதி யார் தந்தது? வேர் கொண்டு அழித்து வெதும்பிடும் மனங்களுக்கு போர் கொள்ளும் ஆயுத அனுமதியை நிராகரித்தால்! பார் கொள்ளும் வன் முறையில் பாதி தீராத்தோ! விடியலுதான் வராதோ ! க.குமரன் யேர்மனி

க.குமரன் 163.23

வியாழன் கவி ஆக்கம் 105 ஆகா- வியப்பில் விழிகள் கிழக்கு ஜெர்மனியில் வளர்ந்து கிழக்கும் மேற்கும் இனைந்த போது அரசியல்வாதி எல்மோட் கோலின் காரியதரிசியாக பணி இனைந்து மந்திரியாக பதவி ஏற்று மூன்று தரம் தேர்தலில் வென்று பதினந்து வருடங்கள் மந்திரியாக பதவி. வகித்த அங்கேலா மெகலின் ஆளுமை ஆகா வியப்பில் விழிக்கவைக்கிறது!! க.குமரன் யேர்மனி

தங்கசாமி தவக்குமார் av

வியாழன் கவி : வியப்பின் விழிகள் கொட்டி கொடுத்து நிற்கும் இயற்கை நம் உள்ளம் எல்லாம் கொள்ளை போக அது அற்புதம் கண்ணை மூடி கொண்டாலும் வியப்பின் விழிகள் பரந்தே தொடர்கிறது உண்ணவும் உறங்கவும் கையேந்த உலகை தொழில் நுட்ப தொற்று நோய் போட்டி உலகை வளர்கிறது பல நூறு உயிர் பலி கண்டே தொடர்கிறது வியப்பின் விழிகள் படர்கிறது மீண்டும் கானகம் தேடி மனம் பாய்கிறது மாசு படா கற்றையும் மனிதமும் தேடி வியப்பின் விழிகள் […]

பவித்திரா. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் மாமா வணக்கம் மாமி கவி அரும்பு – 75 தலைப்பு – கதிரை எனது பெயர் கதிரை எனக்கு நான்கு கால்கள் எனக்கு பல நிறம் உண்டு எனக்கு பல வகை உண்டு இரும்பிலும் உண்டு மரக்கதிரையும் உண்டு என்னில் இருந்து படிப்பார்கள் என்றில் இருந்து வேலை செய்வார்கள். நன்றி வணக்கம் பவித்திரா London 15/03/2023

வசந்தா ஜெகதீசன்

ஆகா! வியப்பில் விழிகள்.. வாழ்வின் தடங்கள் பதியமிட வனப்பில் வாழ்வு உயரம் தொட ஆற்றும் வீரியச் செயல்களிலே அடுத்தபடியின் அடித்தளங்கள் தொடுக்கும் சரமாய் பவ்வியங்கள் தொன்மை துலங்கும் வரைமுறைகள் அன்பால் நேசம் அரவணைக்கும் அம்மா வாழ்வு அதை விளக்கும் உண்மை அன்பில் விதையிட்டு உறவுகள் சரிதம் புடமிட்டு மேன்மை காட்டும் மெய்யன்பில் மேன்மக்களாய் வாழ வழியிட்டார் அன்னை வாழ்வின் பணிச்சுமை அனைத்தும் நிமிர்வின் சாதனை ஆகா! வியப்பில் விழிகள் ஆச்சரியத்தின் குறிகள்! நன்றி மிக்க நன்றி

ரஜனி அன்ரன்

ஆகா ! வியப்பில் விழிகள்……கவி…ரஜனி அன்ரன் (B.A) 16.03.2023 அன்னைக்கு நிகராக இன்னொரு அன்னையாய் அன்னை இல்லாக் குறையினை இன்னை வரைக்கும் நிவர்த்தியாக்கி அன்னையாகவே வாழும் எம் மூத்தஉறவு அக்காவெனும் அற்புத உறவு ! விஞ்ஞானத் துறையினில் கல்வி கற்று தாதியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்று தாதியர் துறையில் பட்டத்தினையும் பெற்று நாற்பது ஆண்டுகளைப் பணியினில் நிறைத்து பிரதம தாதியாகிப் பதவியில் உயர்ந்து தூயபணியினில் சேவையும் செய்கிறாரே ! வியப்பில் விழிகளும் விரிகிறதே விரைவில் நொடிகளும் கரைகிறதே […]

நகுலா சிவநாதன்

ஆகா வியப்பின் விழிம்பில்…… குடும்பத்தின் குத்துவிளக்காய் இருப்பவரே! கூடி உறவுகளை இணைத்தே இன்பம் காண்பவர் அன்பும் பண்பும் அகத்தில் ஒளிர்பவர் ஆறாத காயங்களை ஆற்றும் வல்லவர் புகுந்த வீட்டு உறவாக இருந்தாலும் புன்னகை சிந்தாது கண்ணியமாய் காலத்தை நகர்த்தும் பெண்ணிவர் அஞ்சா நெஞ்சமும் அமைதியின் வடிவமும் அளவாகப் பேசும் நற்பண்பும் நிறைந்தவர் ஆலயத்தொண்டும் ஆன்மீகக் கருத்தும் ஆனந்தம் பொங்க ஆற்றுபவர் ஒற்றுமை உணர்வாலே உறவுகளை பற்றோடு அணைக்கும் பாவையிவர் ஆற்றல் கண்டு வியந்த நாட்கள் பல ஊற்றாக […]

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 188 ஆகா வியப்பில் விழிகள் தான் படிக்கா விட்டாலும் தனதும் தமக்கையின் சேய்களையும் கொழும்பில் படிக்க வைத்து உயர்த்திய சிறியதாயார் அன்னலட்சுமி சிவதாசனே தமக்கை இறந்ததும் கைம்பெண்ணாக பெற்ற பிள்ளைகளோடு ஐந்து பெறாமகள்களையும் சேர்த்து வளர்த்த திறமை கண்டு இன்றும் வியப்பில் எனது விழிகள் கணவனின் ஓய்வூதிய பணத்தில் தெகிவளையில் கஞ்சிகுடித்தாவது பிள்ளைகளின் உயர்வில் மகிழும் சின்னம்மாவுக்கு என் மனமார்ந்த நன்றியும் சமர்ப்பணம் நன்றி

pon.tharma.

வணக்கம் . இது வியாழன் கவி . இலக்கம் -537 ஆகா வியப்பில் விழிகள் .(15.03.23.) —————————————- பற்றுடையார் (இவர் )தமிழில் ,பேசுடுவார் அழகு மொழியில் . கற்றதுவும் தாய் மொழியில் ,கடைசிவரை ,மூச்சென்றார் தன்வழியில் . பெற்ற தாயிலும் மேலென்றார்,நம் மொழியை . மற்றவர்க்கும் உகந்தளிக்க ,மனமுகந்தார்,தனி வழியில் . கனத்த வேளையிலும் ,கலக்கமின்றிச் ,சுமந்து செல்வார் . மனத் தூய்மையுடன் ,மக்களிடம் சேர்த்திடுவார் . பருத்த ஆலாயிருந்து ,பங்களிப்புச் செய்திடுவார் . விருப்புடைய பட்சிகளை […]