18.07-13 Thursday Programes

18.07-13 Thursday Programes

நேரத்தை பயன்படுத்துங்கள் அது உங்களைப் பெருமை படுத்தும்

                            காலை நிகழ்வின் வடிவம்

தட்டிக் கொடுக்கும் நேரம்…
சந்தித்தில் சிந்தித்தது…

—————————————————————————–
அலட்சியப்படுத்திய விஷயத்தின் அவசியம் புரியும் போது
அது நம்மை அலட்சியப்படுத்திவிட்டு வெகு தூரம் போயிருக்கும்…
—————————————————————————–

அரசன் பரிவாரங்களுடன் சென்று கொண்டிருந்த போதுஎங்கிருந்தோ வந்த ஒரு கல் அவன் தலையில் பட்டு காயம் ஏற்பட்டது.

இந்தக் காரியத்தை செய்தவரை தேடி வீரர்கள் நாலாபுறமும்   விரைந்தனர்
இறுதியில் ஒரு கிழவியைப் பிடித்து வந்தார்கள்.

கிழவியை விசாரித்த போது ..
கிழவி சொன்னாள்,”அரசே என் மகன் சாப்பிட்டு மூன்று நாள் ஆகிறது.அவனுக்காகப் பழம்பறிக்கக் கல்லை விட்டு எறிந்தேன்.அது தவறி உங்கள் மேல் பட்டு விட்டது.

”இதைக் கேட்ட அரசர் ஒரு கணம் கடுப்பு ஆனாலும்,
மந்திரியிடம் உடனே கிழவிக்கு பணம் கொடுக்கச் சொன்னார்.எல்லோருக்கும் ஆச்சரியம். சூழ நின்றவர்கள் காரணம் கேட்க அரசர் ஒரு அழகான பதிலைச் சொல்கிறார்…..

ஊகிக்க முடிந்தால் சொல்லுங்கள் பார்ப்போம்.. அரசர் என்ன சொல்லி இருப்பார்..
———————————————————–
தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது, ஆரத்தி எடுக்கும் நடைமுறை. ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக செய்யப்படுவதில்லை.இதில் ஆழமான அர்த்தம் இருக்கிறது……..

ஆரத்தி பற்றி நீங்கள் அறிந்து வைத்திருக்கும் விசயங்கள் என்ன..?
———————–
நன்றி

சைபா மலீக்