16.05.14-News-Friday-FatvTamil

16.05.14-Friday-FatvTamil : பாமுகம் வெள்ளி நேரலை நிகழ்வுகள்:

காலை 7.30: சண்றயிஸ் செய்தி; (மீள்)  /  8மணி: தேவ செய்தி  /  8.30: “உள்ளத்தின் குரல்” பிரபா : தலைப்பு: என் வாழ்கையில் நிம்மதி  உணரப்படுகின்றதா?  அப்படியானால் எங்கே உள்ளது?

9.30: “பண்ணிசை” வாணி மோகன்  /   11மணி: “பேசும் நேரம்” சந்திதத்தில் சிந்தித்தவை  /   12.30 : “கேள்விக் கணைகள்” செல்வி நித்தியானந்தன்  /   13.30 : “சொல் விளையாட்டு” : ஜெயமலர் + வசந்தா   /

ஓவிபி மாலை 5 மணி:  :

மாலை 6.30: “மாலை மயக்கம்” ஜனா : நேரலை  /  இரவு 9.30: “சண்றயிஸ் தமிழ்” செய்தி : நேரலை..

“கவிக்கோ” பரம விஸ்வலிங்கம் இன்று பிறந்திருக்கின்றார் :

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=bF-7twhUuQw”]

++ 00 ++

வீடியோ பண்ணிசைகள்:

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=LBOr3hxkA7g”]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=64ljxtbYygo”]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=bK6CqVraBEY”]

வெள்ளி சிந்தனை : “100” ராம்ஜித் “100”

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=XlU67esoQg4″]

00 ++ 0000 ++ 00

இன்றைய "சண்றயிஸ்" செய்தி :

உலகம் : கீதா பரமானந்தன் :

முன்னாள்    டெனிஸ்  பிரதமர்” லாஸ் லோக்கராஸ் முஷன் “    க்கு நேற்றய   தினம்   தனது   ஐம்பதாவது  பிறந்தநாள் .இவர்  கட்சிப்    பணத்தில்  152 000 குரோனரை  செலவிட்டு  உடைகளும் , உள்ளாடைகளும்  என்று  கடந்த   சில  தினங்களாக , இவர்  மிது  குற்றச் சாட்டுக்கள்  முன்   வைக்கப்பட்டுள்ளது   தெரிந்ததே .
இப்போது   சிலர் பிறந்த நாளை  முன்னிட்டு  ,இவருக்குப்  பரிசாக  உள்ளாடைகளை     அனுப்பி  வருகிறார்கள் .  என்ன   நிறமானாலும்    என்ன  அளவானாலும்  என்ற    அடிப்படையில்    அனுப்புகிறார்கள் , இவர்களில்    ஒருவரான “  கீற்றா கிறிஸ்டென்சன் ”  என்பவர்  பேஸ் புக்கில்   இதற்கான  விசேட பக்கத்தினை   திறந்து  உள்ளாடை    அனுப்ப   நாடளவில்   உற்சாகம்    கொடுக்கிறார் .இவருடைய    பேஷ் புக்கில்   இதுவரை  இதுவரை    100 பேர்   அங்கதவர்களாய்   சேர்ந்துள்ளனர் . 30 பேர்  உள் ஆடைகளை    அனுப்பி விட்டார்களாம் .
வருடத்திற்கு   ஒரு மில்லியன்  குரோனர்கள்   சம்பளம்  எடுத்துக்கொண்டு  சமுதாயத்திற்கு    முன்    மாதிரியாக    வாழ வேண்டிய  ஒருவர்    கட்சிப்  பணத்தில்   உடுப்பெடுத்தது , மக்களுக்கு எவ்வளவு    எரிச்சலைக்   கொடுத்திருக்கிறது   என்று   தமது  கோபத்தை   காட்டவே  இவ்வாறு   செய்வதாகக்   கூறியிருக்கிறார்

அமெரிக்காவில்  வெகு   விரைவாகப்   பரவிவரும்   காட்டுத்  தீயால்  ஆயிரக்கணக்கான   மக்கள்   வெளியேற்றப்பட்டுள்ளனர் .

அமெரிக்காவில் கலிபோர்னியா     மாகாணத்தில்     ஆண்டுதோறும்             கோடைகாலத்தில்   ஏற்படும்  வெப்பத்தால்   மரங்கள்  தீப் பற்றி   பெரும்   சேதம்  விளைவிக்கிறது ,தற்போது   கலிபோர்னியாவில் 100 டிகிரிக்கு   மேல்   வெயில்   சுட்டெரித்து  வருவதால்   அப்பகுதியில்   வடக்கு   தெற்கு   நெடுஞ   சாலையில்   உள்ள   மரங்கள்    தீப்   பிடித்து  எரிகின்றன .

 இதனால்   இங்கு   உள்ள இராணுவத்  தளம் ,பொழுது  போக்கு  மையங்கள்   மூடப் பட்டுள்ளது .மேலும்   சாண்டியாகோ   பகுதியில்   இருந்து   20ஆயிரத்திற்கும்   மேற்பட்ட    பொது   மக்கள்  வெளியேற்றப்   பட்டுள்ளனர் ., இதேபோல் நேற்று முன் தினம் லாஸ் ஏஞ்சல்ஸ் சான்டீகோ இடையே காட்டுத்தீ பரவியதையடுத்து கடற்படை தளவாட நிலையத்தில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இதற்கிடையே கார்ல்ஸ்பட் என்ற இடத்தில் உள்ள ஓய்வு விடுதி ஒன்றிலும், அங்குள்ள சில வீடுகளிலும் தீப்பிடித்து எரியத்தொடங்கியதால்,அப்பகுதியில் இருந்த சுமார் 11 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்ப்பட்டுள்ளனர்.

இங்கு பரவியுள்ள தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

03 பொதுத்   தேர்தலில்   அபார வெற்றி   பெற்று    பிரதமர்    பதவியில்   அமரவிருக்கும்   நரேந்திர மோடிக்கு   பிருத்தானியப்  பிரதமர்    டேவிட் கமரூன்  வாழ்த்துத்   தெரிவித்துள்ளார் உ.லகின்   மிகப் பெரிய   ஜனநாயக நாடான   இந்தியாவின்  பொதுத் தேர்தலை   அதன்   முடிவை  உலக   நாடுகள்   மிக உன்னிப்பாக   கவனித்து  வந்தன .

இந்தத் தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக கூட்டணிக் கட்சிகளின் தயவு கூட இல்லாமலேயே அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

புதிய பிரதமராக நரேந்திர மோடி வரும் 21-ம் தேதி பதவி ஏற்கிறார்.

இதையொட்டி, நரேந்திர மோடிக்கு தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன். அவர் தனது வாழ்த்து செய்தியில், “இந்திய தேர்தலில் வெற்றி பெற்றமைக்காக நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள்.

இந்திய – பிரிட்டன் உறவில் மேலும் அதிக நன்மைகள் விளைய, இணைந்து செயல்பட ஆர்வமாக உள்ளேன்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

04சுவிசில்   ஸ்பிட்   கமரா  செய்திகளை  பேஸ் புக்கில்   வெளியிட்ட    பெண்ணுக்கு  1000  பிரான்க்    அபராதம்    விதிக்கப்   பட்டுள்ளது

சுவிஸ் நெடுஞ்சாலைகளின் போக்குவரத்து சிக்னலும், நகரத்தின் போக்குவரத்து சாலைகளிலும், சாலை விதிகளை மீறி அதிவேகத்தில் செல்லுவோரை கண்காணிக்கும் ஸ்பீட் கமெராக்களை போக்குவரத்து துறையினர் பொருத்தியுள்ளனர்.

இந்த கமெராக்கள் நகரின் எந்தெந்த இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது என பிரபல சமூக வலைத்தளமான “பேஸ்புக்கில்” வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து பொலிசார் கூறுகையில், 2013ம் ஆண்டு சட்டத்தின் படி இந்த முக்கிய தகவல்களை அனுமதியின்றி வெளியிடுவது குற்றமாகும்.

இதற்கு போக்குவரத்து துறையும் நெடுஞ்சாலைத்துறையும் அனுமதி அளிக்க வேண்டும்.

அவ்வாறு அனுமதி இல்லாது சமூக வலைத்தளங்களில் இத்தகவல்களை வெளியிடுவது குற்றமாகும்.

எனவே இக்குற்றத்தை செய்த பெண்ணுக்கு 1000 பிராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

மேலும் இதேபோல் சமூக வலைத்தளங்களில் அனுமதியின்றி பிரசுரிக்கும் நபர்களை தாங்கள் ஸ்கேன் செய்து வருவதாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கீத்தா பரமானந்தன்

++ ++

News in English By : Terentia Baptistdias.

And today’s Headlines are:

Bees swarm on shop window in London’s Victoria Street

M11 crash: ‘Brother and sister’ die in five-vehicle crash

Woman hit by fire engine in Cowley Road, Oxford

 

Bees swarm on shop window inLondon’s Victoria Street

Trained beekeepers had to tackle a 5,000-strong swarm of honeybees surrounding a central London store.

The insects were smoked out after gathering around a sign in front of a store in Victoria Street earlier.

Tony Mann, a trained beekeeper, said the bees were flying around the areas “like scouts”.

The bees were moved to nearby Westminster Cathedral, where they will be looked after by beekeepers on the church’s roof.

It is not known where the bees came from, but some shops in the area have their own hives.

M11 crash: ‘Brother and sister’ die in five-vehicle crash

Two people who died in a five-vehicle accident on the M11 in Essex are believed to be brother and sister, police said.

A man, 53, from the Netherlands and a woman, 45, from Kent died in the crash between Harlow and Bishop’s Stortford at 14:15 BST on Thursday.

Two people travelling in another car were taken to Addenbrooke’s Hospital.

A 49-year-old lorry driver arrested on suspicion of causing death by dangerous driving has been released on bail.

The crash on the northbound carriageway, between junction seven for Harlow and junction eight for Stansted Airport, involved three cars, a lorry and a horsebox.

Essex Police said the pair died at the scene when their Toyota car caught fire after being struck by other vehicles and colliding with the rear of a Mercedes horse box.

The 49-year-old driver of a Jaguar car from Romford who suffered head injuries is still in hospital along with his passenger, a 23-year-old woman from Cyprus, who was due to fly from Stansted Airport.

The lorry driver, from Stafford, along with the drivers of the horsebox and a Vauxhall van received minor injuries.

The road reopened at about 04:30 BST, the Highways Agency said.

The horsebox was carrying five animals from trainer Brian Meehan’s stables.

Woman hit by fire engine in Cowley Road, Oxford

A woman has been seriously injured after being hit by a fire engine in Oxford, police have said.

The woman in her 50s was hit in Cowley Road. An air ambulance landed outside the Morrisons store to take her to hospital.

Oxfordshire Fire and Rescue said the fire engine was going to an incident in Blackbird Leys at 16:00 BST.

Police said the road may be closed for some time between Howard Street and Shelley Road.

The fire service said the fire engine was from Rewley Road fire station.

Police spokeswoman said: “We were called at 15.50 BST this afternoon to an accident between a pedestrian and a vehicle on the Cowley Road.

“The road is currently blocked and diversions have been put in place at the Plain and Between Towns Road.

“The woman, who is believed to be in her 50s, has serious injuries and an air ambulance has landed at the scene.”

Now the news is coming to the end. Thank you to the BBC for the news. Also thank you to FA TV for this opportunity and thank you everyone for listening.

++ ++

இலங்கை : தனுஜா டயஸ்..

அஞ்சலி செலுத்துவதை யாராலும் தடுக்க முடியாது! தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்! சிவாஜிலிங்கம் சூளுரை

சிறந்த முதியோர் சங்கத்தை தெரிவு செய்யும் நடவடிக்கை

முந்திக்கொள்ளும் மகிந்த! மோடியை இலங்கைக்கு வருமாறு அழைப்பு

யாழ்-கிளிநொச்சி பிரதேசங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு தொடர்பில் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு:

வடமாகாணசபை கட்டடத்திற்கு வெளியில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை நினைவுகூர்ந்ததினை தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜே. வி.பி நவம்பர் 13ம் திகதியை அனுஸ்டிக்க முடியும் என்றால் தமிழர்கள் ஏன் அனுஸ்டிக்க முடியாது என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்- இதே நாளில் தான் பல்லாயிரக்கணக்கான எம் உறவுகள் கொன்றொழிக்கப்பட்டனர். ஆனால் நாம் இறந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்துவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. இன்று இங்கு இம்மக்களை நினைவு கூர்ந்து ஏற்றப்பட்ட சுடர் தீபம் தட்டி வீழ்த்தப்பட்டு சப்பாத்துக் கால்களால் மிதிக்கப்பட்டுகின்ற ஒரு கொடிய அடக்கு முறைக்கு கீழே நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நாங்கள் இந்த நாட்டில் இரண்டாம் தர பிஜைகளாக வாழ்ந்து வருகின்றோம், ஆனால் நாங்கள் இரண்டாம் தர பிரஜைகள் அல்ல உங்களுக்கு இந்த நாடு சொந்தம் அல்ல என்பதனை  இந்த சம்பவம் தெட்ட தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது. இருப்பினும் இவர்கள் தடுத்தாலும் மீதமுள்ள இரு நாட்கள் மட்டும் அல்ல இந்த மாதம் பூராகவும் இத்தினத்தை அனுஷ்டிப்போம். ஏன் எதிர்வரும் 22 திகதி நடைபெறும் வடமாகாண சபையின் அடுத்த அமர்வில் கூட அஞ்சலி செலுத்தவுள்ளோம். முடியும் என்றால் கூட்டதொடரை ஒத்திவைத்துப் பாருங்கள். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகமே என்று சவால் விடுகின்றோம் என்றார்.

முந்திக்கொள்ளும் மகிந்த! மோடியை இலங்கைக்கு வருமாறு அழைப்பு

இந்திய பொதுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் இந்த வேளையில் இந்திய பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடியை இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த போதே இந்த அழைப்பை விடுத்ததாக ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரசிங்க தெரிவித்தார்.

சிறந்த முதியோர் சங்கத்தை தெரிவு செய்யும் நடவடிக்கை

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இடம்பெறவுள்ள சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு சிறந்த முதியோர் சங்கத்தை தெரிவு செய்யும் நடவடிக்கையினை சமூக சேவைகள் அமைச்சு மேற்கொண்டு வருகின்றது. இதனடிப்படையில் மாவட்ட மற்றும் தேசிய ரீதியில் முதல் மூன்று  முதியோர் சங்கங்கள் போட்டிக்கு தெரிவு செய்யப்படும் என அமைச்சின் முதியோர்களுக்கான தேசிய செயலக பணிப்பாளர் சுவிந்த எஸ்.சிங்கப்புலி தெரிவித்துள்ளார். முதியோர் நலன்பேணலில் சிறப்பாக செயற்படும் முதியோர் சங்கங்களை ஊக்குவிக்கும் நோக்கில் இத்திட்டம் செயற்படுத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

யாழ்-கிளிநொச்சி பிரதேசங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு தொடர்பில் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு

வடக்கில்'(யாழ்-கிளிநொச்சி)குடிநீர்த் தட்டுப்பாடும்,சுகாதாரத் தேவைப்பாடும்’  என்ற கருப்பொருளில் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஒன்று இன்று காலை10மணியளவில் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இந்தக் கருத்தரங்கில் யாழ் குடாநாட்டில் பிரதானமாக மக்கள் போதுமான அளவு குடிநீரைப் பெற முடியாமல் இருப்பதற்கு நிலக்கீழ் நீர் போதாமை மற்றும் நிலத்தடி நீர் வளம் மாசுபடல் போன்ற காரணங்களே  ஆகும்.இதனால் தற்போதைய நீர் வழங்கல் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே நீர் விநியோகத்தை கொண்டுள்ளதால் பொதுமக்களின் தேவைக்கேற்ப விஸ்தரிக்க முடியாமல் உள்ளதாக யாழ்-கிளிநொச்சி நீர்வளங்கள் மற்றும் சுகாதார திட்டப் பணிப்பாளர் பாரதிதாசன் தெரிவித்தார். மேலும் அவர் குறிப்பிடுகையில்,யாழ்- கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் திட்டத்தை செயற்படுத்துவதன் மூலம் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்குவதுடன் சுகாதாரத்தையும் மேம்படுத்த முடியும்.

மேலும் இரணைமடுக் குளத்தின் நிலவரத்தை ஆராய்ந்தால் இரணைமடுக் குள புனரமைப்பு நிதி 15மில்லியன் அமெரிக்க டொலர் ஆகும். இந்த இரணைமடுக்குள புனரமைப்பால் பல நன்மைகள்; ஏற்பட அதிக வாய்ப்புக்கள் உண்டு. குறிப்பாக நீர்சார நோய்கள் குறைக்கப்படும்,வறுமை ஒழிப்பு,மற்றும் யாழ்ப்பாணம்  கிளிநொச்சி மாவட்ட மக்களின் பாதுகாப்பான குடிநீர்த் தேவை உறுதிப்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார். மேலும் இந்நிகழ்வில் சிறிய நடுத்தர மற்றும் பாரம்பரிய கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

++ ++