11.07-13 Thursday Programes

11.07-13 Thursday Programes

நேரத்தை பயன்படுத்துங்கள் அது உங்களைப் பெருமை படுத்தும்

                            காலை நிகழ்வின் வடிவம்

தட்டிக் கொடுக்கும் நேரம்…
சந்தித்தில் சிந்தித்தது…
—————————————————————
மூக்கில் ரத்தம் கசியாமல் இருக்க,
மற்றவர் விசயத்தில் மூக்கை நுழைக்காமல்
இருப்பதே நலம்.
—————————————–

உங்கள் சிந்தனையைக் கிளரி மிகப் பொருத்தமான ஒரு பொன்மொழியைத் தாருங்கள்...

தன் முன்னாள் வந்து நின்ற ஓநாயை கோபமாக பார்த்து தன் முட்களைச் சிலிர்த்து நின்றது முள்ளம் பன்றி. ஓநாய் உடனே பதற்றத்துடன், பயப்படாதே முள்ளம் பன்றி, உன் அழகை ரசிக்கத்தான் வந்திருக்கேன் என்றது. என்னது? நான் அழகா? ஆமாம். நீ செம அழகு. ஆனா உன் உடம்புல இருக்கிற முல்லுதான் உன் அழகை கெடுக்குது, என்றது ஓநாய்

ஆனா, அதுதானே என்னைப் பாதுகாக்குது என்றது முள்ளம்பன்றி, உண்மைதான். ஆனா, அதை எடுத்துட்டினா, நீ இன்னும் அழகாயிடுவே, யாருக்கும் உன்னை கொல்லனும்னு மனசே வராது. ஓநாயின் பசப்பு வார்த்தையில் மயங்கிய முள்ளம்பன்றி, தன் முட்களை எல்லாம் மழித்துவிட்டு ஓநாய் முன் வந்து நின்றது.

இப்போ நான் இன்னும் ஆழகாயிருக்கேனா? என்று கேட்டது. அழகாய் மட்டும் இல்லை, அடிச்சு சாப்பிடுவதற்கு வசதியாகவும் இருக்கு, என்றபடி முள்ளம்பன்றி மேலே பாய்ந்தது ஓநாய்.

———————————–
சிவப்புத் துணியைக் கண்டால் மாடுவது ஓடுவது ஏன்..
சிவப்புத் துணியைக் கண்டால் மாடு மிரளுமா?

—————————–

எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிகொண்டிருப்பவர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்……..?
இதிலிருந்து தவிர்ந்து கொள்ள என்ன செய்யலாம்..?.

————————————

நன்றி
சைபா மலீக்