01.07.13 Monday FA Tv Tamil : Programes
நேரத்தை பயன்படுத்துங்கள் அது உங்களைப் பெருமை படுத்தும்
காலை நிகழ்வின் வடிவம்
இன்று தனது 28வது அகவையை கொண்டாடி மகிழ்கின்றார் ஜெர்மனி வசந் வரதராஜா…
600 வது OVP ஆக்கம் தனை வானலை எடுத்து வர ஆதரவு கரம் கொடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றார் வசந்…
வசந்திற்கு எங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
தட்டிக் கொடுக்கும் நேரம்…
சந்தித்தில் சிந்தித்தது…
——————————————————————————————————
கடன் கொடுப்பவன் உங்கள் அதிகாரியை விட மோசமானவன் ; அதிகாரி உங்கள் உழைப்பைத் தான் சொந்தமாக்கிக் கொள்வான். ஆனால் கடன் கொடுத்தவனோ உங்கள் கெளரவத்தை சொந்தமாக்கிக் கொள்வதோடு, அதை கெடுக்கவும் செய்து விடுவான்.
உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து பேசுங்கள்…….
———————————————————–
உப்புச்சப்பு இல்லாத கதை மாதிரி இருந்தாலும் இதில் விசயம் இருக்கிறது..முடிந்தால் கண்டு பிடியுங்கள்…….இதற்கு ஒரேவரியில் ஒரு பொன்மொழியைச் சொல்ல
முடியுமா என்று பாருங்கள்
..…..
மந்தையிலிருந்து பிரிந்து போன ஒரு ஆட்டுக் குட்டியை
ஓநாய் துரத்தியது.
தப்பிக்க முடியாது என்று தீர்மானமாகத்
தெரிந்ததும், ஆட்டுக்குட்டி, ஓநாயைப் பார்த்து, “”நான்
இனித் தப்ப முடியாது என்பது எனக்குத் தெரியும்.
நான் இன்னும் சிறிது நேரம்தான் வாழப் போகிறேன்.
இறப்பதற்கு முன் என்னை மகிழ்ச்சியாகச் சிறிது நேரம் இருக்க
அனுமதிப்பாயா? சிறிது நேரம் பாட்டுப் பாடேன் நான்
ஆடுகிறேன்,” என்று கேட்டது.
ஓநாயும் அதற்குச் சம்மதித்து, தனது குழலை எடுத்து சத்தமாக
வாசித்தது; ஆட்டுக் குட்டியும் நடனமாட ஆரம்பித்தது.
ஆனால், சில நிமிடங்களுக்குள்ளேயே குழல் இசை கேட்டு,
ஆட்டு மந்தையை மேய்ப்பவர்கள் ஓடி வந்து ஓநாயை விரட்டி
அடித்தனர். ஓடிக் கொண்டே ஓநாயும், “எனக்கு இது தேவைதான்.
வேட்டையாடுவதுதானே என்னுடைய தொழில். அதை விடுத்து
குழல் ஊதியது தவறுதான்!’ என்று சொல்லி வருந்தியது.
——————————–
இந்தப் பழமொழியை எந்த மாதிரியான ஒரு சந்தர்ப்பத்தில் பயன்படுத்துவீர்கள்…
இதன் அர்த்தம் என்ன……..??
உப்பு தின்னவன் தண்ணி குடிக்கணும்
————————————
நன்றி
சைபா மலீக்